
இறுகப்பற்றியிருந்த நம்பிக்கை சில நேரம் பொய்த்துப்போகலாம்….!! – இதயத்தை இளக வைக்கும் கவிஞர் நிஷா ரஹ்மான் கவிதைகள் -1 அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
கவிதை -1
இவன்தான் என்னுலகம்
என இறுகப்பற்றியிருந்த நம்பிக்கை சில நேரம்
பொய்த்துப்போகலாம்….!!
இவன்தான் என் வாழ்க்கை
என்ற மனவோட்டமும் சில நேரம்
ஆட்டம் காணலாம்….
நேரெதிரே ஒரு துரோகத்தை
சந்திக்க நேரிடலாம்….
நேற்றுவரை அவனுக்காக
செய்த செயல்கள்
இன்று
பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம்….
அவனுக்காக மாற்றிக் கொண்ட எண்ணங்களை
நீயே வெறுத்து ஒதுக்கலாம்….
அந்த ஒற்றை அன்பினால்
இழந்த மற்ற உறவுகளைப்பற்றி
யோசிக்கலாம்….
திரும்பவும் பழைய இடத்தையே
மனம் நாடலாம்…
ஆனால்
வாழ்தலும்
திரும்ப அதே இடத்தை அடைதலும்
அத்தனை எளிதல்லவே…
கடந்தது கடந்ததாகத்தான்
இருக்கும்….
இன்னும் கூடுதலாக
கால விரயமும் நம்மை கூடவே
காயப்படுத்திடலாம்…
-நிஷா ரஹ்மான் கவிதைகள்
