உலகறிந்த கல்வியாளர், மனித நேயப் பண்பாளர், முன்னாள் துணை வேந்தர் பால குருசாமி அக்கப்போர் நாளிதழுக்கு குடியரசு தின சிறப்பு பேட்டி…!!

உலகறிந்த கல்வியாளர், மனித நேயப் பண்பாளர், முன்னாள் துணை வேந்தர் பால குருசாமி அக்கப்போர் நாளிதழுக்கு குடியரசு தின சிறப்பு பேட்டியளித்தார்.

முதன்மை தலைமை செய்தி ஆசிரியர் ஆர்.கே.விக்கிரம பூபதி, செய்தி ஆசிரியர் நாகக்குடையான் நா.மணி வண்ணன் ஆகியோர், கோவையில் வடவள்ளி அருகே உள்ள அவரது இல்லத்தில் 25-1-26 ஞாயிறு அன்று சந்தித்தனர்.

அவரது விரிவான சிறப்பு நேர்காணல் விரைவில் அக்கப்போர் தொலைக்காட்சியில் இடம்பெறும்.

அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்
பேராசிரியர் முனைவர் E.பால குருசாமி தமிழ்நாட்டின் சிறந்த கல்வியாளர்களில் ஒருவராக நாடு முழுவதும் கருதப்படுகிறார். அவரது பெற்றோர்கள் அவருக்கு இட்ட பெயர் கஸ்தூரி. குழந்தையாக இருந்த கஸ்தூரி அழுது கொண்டே இருந்ததால் பெயரை மாற்ற சிலர் சொல்லி இருக்கிறார்கள்.

இதன்பிறகு பால குருசாமி என பெயரை மாற்றி சூட்டிய பிறகு குழந்தை அழுகை நின்றதாம்.

முனைவர் பாலகுருசாமி, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆக திறம்பட பணியாற்றியவர்.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தனி மதிப்பையும், அளவிடற்கரிய பெரும் நம்பிக்கையை பெற்றவர்.

முதல்வரிடமே சட்ட விதிமுறைகளை தைரியமாக சுட்டிக்காட்டும் நேர்மை குணம் கொண்டவர்.

கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆழ்ந்த அறிவும், நிர்வாகத் திறனும் கொண்டவர் முனைவர் பால குருசாமி.

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த காலத்தில்,
கல்வித் தர மேம்பாடு
ஆராய்ச்சி நடவடிக்கைகள் ஊக்கம்
தொழில்துறை–
பல்கலைக்கழக இணைப்பு
மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு நோக்குள்ள கல்வி
என பல முக்கிய சீர்திருத்தங்களை அவர் முன்னெடுத்தார்.

கணினி கல்வி, மென்பொருள் துறை வளர்ச்சி,
E-Governance, தொழில்நுட்ப மேலாண்மை போன்ற துறைகளில் பல ஆய்வுக் கட்டுரைகள், 52 நூல்கள் இதுவரை எழுதியுள்ளார்.

மாணவர்களுக்கும்,, ஆசிரியர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் பல கருத்தரங்குகள், சொற்பொழிவுகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த கல்வித்துறை நிபுணர்களில் ஒருவர் என்ற பெருமையை பேராசிரியர் முனைவர் பாலகுருசாமி பெற்றுள்ளார்.

நம்மை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே நமக்கும் மகிழ்ச்சி என்ற மனித நேயம் கொண்டவர் . அண்மையில் தன் வீட்டில் பணியாற்றிய 3 பணியாளர்களுக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் தனி வீடுகளை கட்டித்தந்து மனிதத்தை பேச வைத்த பெருந்தன்மைக்கு சொந்தக்காரர்.

அவருக்கு அக்கப்போர் இணைய நாளிதழ் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெற்றோம்…!!

  • செய்திப்பிரிவு, அக்கப்போர் இணைய நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)