கல்வி நிறுவனங்களுக்கான வளாக வசதிகள் மற்றும் விடுதிகள் தரநிலை குறித்த ‘மானக் மந்தன்’ நிகழ்ச்சி…

கல்வி நிறுவனங்களுக்கான வளாக வசதிகள் மற்றும் விடுதிகள் தரநிலை குறித்த ‘மானக் மந்தன்’ நிகழ்ச்சி….

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் நா.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் நா.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now

மார்ச் 21, 2026
இந்திய தர நிர்ணய அமைவனம் (Bureau of Indian Standards – BIS), கல்வி நிறுவனங்களுக்கான வளாக வசதிகள் மற்றும் விடுதிகள் குறித்த IS 19418:2025 இந்திய தரநிலையை மையமாகக் கொண்டு, தனது சென்னை கிளை அலுவலகத்தில் இணைய வழியில் ‘மானக் மந்தன்’ நிகழ்ச்சியை நடத்தியது.
புதிதாக வெளியிடப்பட்ட இந்த இந்திய தரநிலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பங்குதாரர்களின் கருத்துகளைப் பெறவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

சுகாதாரம், பாதுகாப்பு, தங்குமிட சேவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற முக்கிய அம்சங்களை இது உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் கல்வி நிறுவனங்கள் முழுமையான மற்றும் தரமான கற்றல் சூழலை உருவாக்க உதவுகிறது.

பி ஐ எஸ் சென்னை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குனர் மற்றும் தலைவருமான திரு.S.D.தயானந்த், வரவேற்புரையை வழங்கி, தரநிலைகள் நடைமுறையில் அமல்படுத்துவதில் பங்குதாரர்கள் மிக முக்கியமானவர்கள் என்பதை வலியுறுத்தினார். ‘மானக் மந்தன் போன்ற நிகழ்ச்சிகள் மூலம், பங்குதாரர்கள் தரநிலைகளுடன் நேரடியாக இணைந்து செயல்படும் ஒத்துழைப்பு சூழலை பி ஐ எஸ் உருவாக்கி வருகிறது. கல்வி வளாகங்கள் மற்றும் தங்குமிட வசதிகளைச் சார்ந்த தரநிலைகள், பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் தரநிலை சார்ந்த கல்வி சூழலை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கின்றன’ என அவர் தெரிவித்தார்.

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென் மண்டல துணை தலைமை இயக்குனர் திரு. சந்தீப் குமார் கனோஜியா பேசகையில், ‘தரநிலைகளை உருவாக்கி அவற்றை ஊக்குவிப்பதன் மூலம் பல துறைகளில் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் பிஐஎஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி நிறுவனங்களின் சூழலில், IS 19418:2025 போன்ற தரநிலைகள் வளாக வசதிகள் மற்றும் மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான அளவுகோலாக செயல்படுகின்றன என அவர் குறிப்பிட்டார்.

தரநிலையின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து நடைபெற்ற அமர்வை பி ஐ எஸ் சென்னை கிளை அலுவலகத்தின் இணை இயக்குனர் திரு.BJ.கெளதம் நடத்தினார். அவர் IS 19418:2025 தரநிலையின் முக்கிய அம்சங்களை விரிவாக விளக்கினார். உட்கட்டமைப்பு தேவைகள், விடுதிகள், நிர்வாக அமைப்புகள், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நிலைத்தன்மை நடவடிக்கைகள் ஆகியவற்றின் நடைமுறை பயன்பாடுகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.

பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குதாரர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். உயர்கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொடர்புடைய சேவைகள் பிரிவு குழுவின் உறுப்பினர் செயலாளர் திரு. ஆதித்யா பட், இணையம் வழியாக கலந்து கொண்டு பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விரிவான பதில்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

பங்கேற்பாளர்கள் BIS Care செயலி மற்றும் Standards Watch போன்ற பி ஐ எஸ் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தி, தரநிலைகள் மற்றும் தொடர்புடைய புதுப்பிப்புகளை தொடர்ந்து அறிந்து கொள்ளுமாறு ஊக்குவிக்கப்பட்டனர்.

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் நா.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top