காலம் பதில் சொல்லும்…!! தவெக ஆதவ்- க்கு நடிகர் ரஜினிகாந்த் பகிரங்க எச்சரிக்கை…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

கே.சி பழனிச்சாமி சொல்கிறார்:

ஆதவ் அர்ஜுனாவின் ரஜினிகாந்த் அவர்கள் குறித்த அவதூறான கருத்துக்கு எழுந்திருக்கிற எதிர்ப்பும், அதற்கு திரு. ரஜினிகாந்த் அவர்களே ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து “காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்” என்கிற கருத்து மூலம் தேர்தலில் நிச்சயம் தவெக தொண்டர்களுக்கு எதிராக ரஜினியும் அவரது ரசிகர்கள் இயங்குவார்கள். அது விஜயின் வாக்கு வங்கியை சிதைக்கும், பொதுமக்களிடமும் ஒரு தாக்கத்தை உண்டாக்கும்.

திரு.விஜய் எல்லா காலகட்டத்திலும் அமைதியாக மௌனம் காப்பது தவறு, குறைந்தபட்சம் ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து விஜய் கருத்து தெரிவித்திருக்க வேண்டும். திரு.ரஜினிகாந்த் அவர்களை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்.

தற்பொழுது ஆதவ் அர்ஜுனா ” மாற்றுக் கட்சியினர் யாராவது நம்மை தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டாம், நம்மை அடிக்க அடிக்க அதுதான் நமக்கு பலமாக மாறும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் நம்ம அதை சட்டரீதியாக சந்திப்போம் வெற்றி நிச்சயம்” என்கிறார்.

ரஜினிகாந்த் அவர்களின் கருத்துக்கு பிறகு ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்கள். அவர் இன்னும் திருந்தவில்லை, இனி திருந்தவும் மாட்டார் என்பதை தான் காட்டுகிறது. திருமாவளவனை போல விஜயும் ஒரு முடிவெடுத்தால் தான் அவரது கட்சி காப்பாற்றப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top