
கௌசிகா நதி ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி துவங்கியது…!!நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை…!!
கோவை மாநகரின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான கௌசிகா நதியின் ராஜவாய்க்காலை தூர்வாரும் பணி பூமி பூஜையுடன் இன்று தொடங்கியது. கணுவாயில் இருந்து சின்னவேடம்பட்டி ஏரி வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த வாய்க்கால், ஒரு காலத்தில் குடிநீருக்கும் விவசாயத்திற்கும்ஆதாரமாகவிளங்கியது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி வறண்டு கிடந்த இந்த வாய்க்காலை மீட்டெடுக்கும் முயற்சியில் கௌசிகா நீர் கரங்கள் மற்றும் சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றன.
இந்ததன்னார்வஅமைப்புகளின்தொடர் முயற்சியால், கடந்த சில ஆண்டுகளாக பெய்த பருவமழையின்போது, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாய்க்காலில் நீர் வழிந்தோடியது. இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான தூர்வாரும் பணிகளை அபெக்சான்
தனியார் நிறுவனத்துடன் இணைந்து தன்னார்வ அமைப்புகள் மேற்கொள்கின்றன.
தூர்வாரப்படுவதன் இப்பணிகளை தொடங்கி வைத்த நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், இந்த ராஜவாய்க்கால் மூலம் நகரின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், பல லட்சம் லிட்டர் நீரைத் தேக்கும் கொள்ளளவு கொண்ட சின்னவேடம்பட்டி ஏரி நிரம்பவும் வழிவகுக்கும் தெரிவித்தார். இது பிரச்சனையைத் தீர்க்க இத்தகைய பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தனியார் நிறுவன ஊழியர்கள் வாய்க்கால் கரைகளில் தேங்கிக்கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இந்நிகழ்ச்சியில் கௌசிகா நீர் கரங்கள் அமைப்பின் நிறுவனர் செல்வராஜ் மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.