

சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் பெனிக்ஸ் ஆகிய இருவரையும் கொன்றது 9 போலீசார் தான் என மதுரை நீதிமன்றம் உறுதிப்படுத்தி விட்டது. முழு தீர்ப்பு விரைவில் வருகிறது.


சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் பெனிக்ஸ் ஆகிய இருவரையும் கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சேர்த்த போது முதலில் இறந்த பென்னிக்சின் உடலை கொரோனா நோயாளியாக எரிக்க சிறைத்துறை பணியாளர்கள் மற்றும் அவர்கள் நிர்ப்பந்தம் பேரில் மருத்துவர்களும் முடிவு செய்தனர்.
அப்போது தனக்கு தெரிந்த ஒரு வாரம் இருமுறை இதழ் நிருபர் மூலம் தனது வேலை போனாலும் பரவாயில்லை என்று கருதி உண்மையை வெளிக் கொண்டு வந்து நீதியை நிலை நாட்டிய கோவில்பட்டி அரசு மருத்துவமனை செவிலியர் வீரபாண்டியன்பட்டணம் புனித தோமையார் பள்ளி முன்னாள் (St. Thomas Hr Sec School) மாணவி வனஜா அவர்கள் தான் என்பது இன்னும் அதிகம் அறியப்படாத தகவல்.
செவிலியர் வனஜா
வாழ்த்துகள், நன்றிகள்!
நீதி வென்றதற்கு உங்களது துணிச்சலும் காரணம்!
இவர் மறைந்த தேவேந்திர் வேளாளர் பேரவை நிறுவனர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான மறைந்த பொட்டல்காடு கர்ணனின் மனைவி ஆவார்.
பதிவு ராம்குமார் ஆதித்தன்
