filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 90; hdrForward: 0; shaking: 0.063781; highlight: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.0000,0.0000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:01:25 22:42:28; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (0, 2);aec_lux: 303.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 35;zeissColor: bright;

காந்தியவாதி, திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ந. மார்க்கண்டன் – அக்கப்போர் நாளிதழுக்கு குடியரசு தின சிறப்பு பேட்டி…!! அக்கப்போர் நாளிதழ் Akkappore.news சொடுக்குங்க

திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ந. மார்க்கண்டன்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் தனி செயலாளர் கல்யாணம் பரிந்துரையில் பள்ளியில் சேர்க்கை பெற்ற சிறப்பு பெற்றவர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கும் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ஆகப் பணியாற்றியவர். சிறந்த காந்தியவாதி.

கல்வி, நிர்வாகம், சமூகம் வளர்ச்சி ஆகிய துறைகளில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட சிறந்த கல்வியாளர் ஆவார்.

காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் அவர் துணைவேந்தராக இருந்த காலத்தில்,
கிராமிய மேம்பாட்டை மையமாகக் கொண்ட கல்வி
ஆராய்ச்சி மற்றும் சமூகப் பணிகளுக்கு முக்கியத்துவம்
மாணவர் நலன் சார்ந்த திட்டங்கள்
காந்திய சிந்தனைகளை கல்வியுடன் இணைத்த நடைமுறை முயற்சிகள்
என பல முன்னேற்றங்களை மேற்கொண்டார்.

கல்வி என்பது ஒழுக்கத்தை கற்பிப்பதாக
இருக்க வேண்டும்.
அரசியல், கல்வி, சமூக சிந்தனை ஆகிய துறைகளில் பல கட்டுரைகள், ஆய்வுகள் மேற்கொண்டு எழுதியுள்ளார்.

கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் மூலம் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.

கிராமிய இந்தியாவின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியம் என்ற காந்திய கோட்பாட்டை நடைமுறையில் செயல்படுத்திய முன்னோடி கல்வியாளர் என்ற சிறப்பிடம் பேராசிரியர் ந. மார்க்கண்டன் அவர்களுக்கு உண்டு .

தேசபக்தி நிறைந்த இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதை வாழ்நாள் லட்சியமாக கொண்டவர்.

அக்கப்போர் நாளிதழுக்கு குடியரசு தின சிறப்பு பேட்டியளித்தார்.

முதன்மை தலைமை செய்தி ஆசிரியர் ஆர்.கே.விக்கிரம பூபதி, செய்தி ஆசிரியர் நாகக்குடையான் நா.மணிவண்ணன் ஆகியோர், கோவை காந்திபுரத்தில் உள்ள இந்திராணி இல்லத்தில் 25-1-26 ஞாயிறு அன்று சந்தித்தோம்.

அவரது விரிவான சிறப்பு நேர்காணல் விரைவில் அக்கப்போர் தொலைக்காட்சியில் இடம்பெறும்.

அவருக்கு அக்கப்போர் இணைய நாளிதழ் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்து, அவரது ஆசீர்வாதங்களை நாமும் பெற்று, விடைபெற்றோம்…!!

  • செய்திப்பிரிவு, அக்கப்போர் இணைய நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)