சேலம் கலெக்டருக்கு … உம்பிளிக்கம்பட்டி பூலா ஏரி, ஆயக்கட்டுதாரர்கள் – விவசாயிகள் சங்க ஆலோசகர் சதாசிவம் உருக்கமான வேண்டுகோள்…!! அக்கப்போர் இணைய நாளிதழ், akkappore.news சொடுக்குங்க


சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம், காடையாம்பட்டி வடக்கு கிராமம் உம்பிளிக்கம்பட்டி பஞ்சாயத்திலுள்ள உம்பிளிக்கம்பட்டி பூலா ஏரி ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் வணக்கம்.

நாங்கள் எங்களுக்குள் விழிப்புணர்வு இல்லாததால் 17 ஆண்டுகள் எங்கள் பூலா தண்ணீரை கல்குவாரி குத்தகைதாரர்கள் சக்தியாலும் அரசு அலுவலர்கள் அஜாக்கிரதை காரணத்தால் எங்கள் உம்பிளிக்கம்பட்டி பூலா ஏரி தண்ணீரை 17 ஆண்டுகள் இழந்தோம்

மீண்டும் நாங்கள் சட்டத்தை மதித்தால் 2023 ல் அரசு அலுவலர்கள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உம்பிளிக்கம்பட்டி பூலா ஏரிக்குள் உள்ளபாதையை எடுக்க கூறி 1000 கடிதங்கள் எழுது மனிதநேயத்தை உடன் அணுகிய போது 2023 ல் உயர்நீதிமன்ற உத்திரவு படி எடுப்பதாக பொய்யை கூறி மக்களை பிரட்டி கல்குவாரி குத்தகைதாரர்களுக்கு புதிய பாதை அமைத்தார்கள்.

அதையும் தெரிவித்துள்ளோம் அப்போதே அன்றைய தேதியிலேயே….

01.03.2026 👆🏼

மேலே பதிவிட்ட காணொளியை கண்டு முதலில் சந்தோசம் அடைந்தேன். ஆனால் உற்று நோக்கும் போது நீர்வழி ஓடை ஆக்கிரமிப்பு எடுப்பதாக இருந்தால் முதலில் உம்பிளிக்கம்பட்டி பூலா ஏரியிலிருந்து ஆரம்பித்து நீர்வழி ஓடையை 8 அடி அகலம் 12 அடி ஆழம் செய்து கல்குவாரி குத்தகைதாரர் தடுத்து நிறுத்தியுள்ள தண்ணீரை உடைத்து தரை வழியாக கொண்டுவருவது தான் அரசு ஆணை எண் 64 ம் அரசு ஆணை எண்540 ம் உயர்நீதிமன்ற கட்டாய உத்திரவு 04.12.2021 ன்படி….

“நீர்நிலை மற்றும் நீர்வழி ஓடைகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அரசும் அரசு அலுவலர்களே செய்ய வேண்டும் என் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவு இருக்கும் பட்சத்தில் கீழ்க்கண்ட செயல்பாடு எவ்வாறு சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் காடையாம்பட்டி வடக்கு கிராமத்தில் கீழ்க்கண்டவாறு நடைபெற்றது

👇🏽👇🏽👇🏽

01.03.2026 ல் இப்போது அன்பரசு தோட்டம் அருகில் நீர்வழி ஓடையை சரி செய்ய யார் ? தனிமனிதன் தனிப்பட்ட முறையில் ஆக்கிரமிப்பு அகற்ற அனுமதி கொடுத்து யார் எனவும் அப்படி கொடுத்து இருந்தால் அதை பதிவிடவும்..


இதை நான் கிராம நிர்வாக அலுவலர் திரு பன்னீர் செல்வம் மற்றும் கிராம செயலாலர் திரு கணேசன் அவர்களை தொடர்பு கொண்ட பொழுது அவர்கள் இருவரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அவரவர் இடத்தில் அவர்களே ஆக்கிரமிப்பு எடுக்க சொன்னோம் என்றார்கள்.

கிராம நிர்வாக அலுவலர் திரு பன்னீர் செல்வம் மற்றும் உம்பிளிக்கம்பட்டி ஊராட்சி செயலாளர் திரு கணேசன் அவர்கள் இருவரும்

இன்றைய செயலின் உள்நோக்கம் “கைபுண்ணிற்கு கண்ணாடி தேவை இல்லை” என்பது போல் தெளிவாக புரிகிறது.

அதேபோல் நீர்வழி ஓடையில் உள்ள நீர்வழி ஓடை புறம்போக்கு நிலத்தை அருகில் பயன்பாட்டிலுள்ள விவசாய நிலம் உரிமம் உள்ள விவசாயிகளுக்கு கொடுக்கவும் அரசு ஆணை விதித்துள்ளது என்பதை மனதில் கொண்டு

இதே போல் இணைந்த🤝 கரங்கள் எதையும் சாதிக்கும் என்பது போல்

2023 ல் உயர்நீதிமன்ற உத்தரவு படி என கூறி கல்குவாரி உரிமையாளர்களுக்கு புதிய பாதை அமைத்தார்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்

அரசு விதிமுறைபடி ஆக்கிரமிப்பு இருந்தால் அவர்கள் இருவரும் நோட்டீஸ் கொடுக்காமல் இருக்கிறார்கள் அலுவலர்கள் மேட்டூர் சார்பு ஆட்சியர் பார்வை இட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் இருவரும் நோட்டீஸ் அனுப்பச்சொன்னதை இவர்கள் செய்யாமல் கல்குவாரி குத்தகைதாரர்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.

அப்படி செய்யாமல் வாய்வழியாக கூறி இருந்தால் அதை வாய்ஸ் செய்தியாக குழுவில் பதிவிடுங்கள் என்றால் மறுக்கின்றனர்.

கனம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மேட்டூர் சார்பு ஆட்சியர் அவர்கள் உம்பிளிக்கம்பட்டி பூலா ஏரி ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் விவசாயிகள் சங்கம் கேட்டது போல்

நீர்வழி ஓடையை 8 அடி அகலம் 12 அடி ஆழம் செய்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை ஏரியிலிருந்து ஆரம்பித்து செய்து கொடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

என்றும் அன்புடனும் மனிதநேயத்துடன் அணுகும் …..

உங்கள்

JcHGF.UP சதாசிவம், ஆலோசகர் உம்பிளிக்கம்பட்டி பூலா ஏரி ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் விவசாயிகள் சங்கம், உம்பிளிக்கம்பட்டி.

இடம்: உம்பிளிக்கம்பட்டி, நாள்:18.03.2026

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top