

கூட்டம் எல்லாம் ஓட்டா மாறாது,
இந்தக் கூட்டத்துக்கு ‘TVK, TVK, TVK’னு கத்த மட்டும்தான் தெரியும்!
தற்குறிகள்,
அணில்கள்,
அரசியல் தெரியாத கூட்டம்,
அரசியல் படுத்தப் படாத கூட்டம்,
ரிசல்டை வச்சு பெற்றோர்கள் குழந்தைகளை தப்பான முடிவெடுக்க விடாமல் பாத்துக்கணும்,
தேர்தல் முடிவு அன்னிக்கு அணில் வறுவல் ரெடி,
இன்னும் பலபல கேலிகள் எகத்தாளங்கள்..
எள்ளி நகையாடல்கள்..
ஓட்டுக்குக் காசு கொடுத்தா ஜெயிச்சுடலாம்,
ஏகப்பட்ட சாதி கட்சிகளை கூட்டணிக்கு சேர்த்துட்டா ஜெயிச்சுடலாம்,
தேர்தல் முந்தைய கருத்துக்கணிப்பு சாதகமா இருந்த ஆட்சியைப் பிடிக்கலாம்,
ஐடி விங்க்காரனை வச்சு டெய்லி நாலு நெரேட்டிவ் செட் பண்ணா ஜெயிச்சுடலாம்…..
ஆரம்ப கட்டத்துல – “விஜய் ஒரு சீட் கூட வாங்க மாட்டார்!’
கரூர் சம்பவத்துக்கு பின் – “விஜய் கட்சி இதோட காலி முடிஞ்சது அவ்வளவுதான்!!”
தேர்தல் சில மாசம் முன்னாடி – “விஜய் ஓட்டைப் பிரிப்பார் ஜெயிக்க மாட்டார்!!!”
தேர்தல் அறிவிச்சப்ப – “சில இடங்களில் சீட் வாங்குவார், அதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது!!!!”
“விஜய் பிரிக்கப்போற ஓட்டு இரண்டு கட்சில ஒரு கட்சிக்கு சாதகமாகப் போய் அவங்க தான் ஆட்சியைப் பிடிப்பாங்க!”
“விஜய் 10 சீட் வாங்கிட்டா நான் அரசியல் பேசுவதையே விட்டுடறேன்”
இப்படி பல வகையிலும் கேலி பேசிய அரசியல் கட்சிகள்/அரசியல் விமர்சகர்கள் அத்தனை பேரின் வியூகத்தையும் மக்கள் அடிச்சு உடைச்சு எறிஞ்சிருக்காங்க !
இங்க காசு கொடுத்தா ஓட்டு வாங்கிடலாம்னு இருந்த நடைமுறைய இந்த தேர்தல் வெற்றிகரமாக முறியடிச்சிருக்குது!!
பண்ணையார் காலத்து அரசியல்வாதிகளுக்கு விருப்ப ஓய்வு வழங்கி இருக்கிறது இந்தத் தேர்தல்!!!
எந்தவித பெரிய படைபலம் மற்றும் பணபலம் இல்லாத சாதாரண சக மனிதர்களை வெற்றிக்கட்டிலில் ஏற்றி இருக்குது இந்தத் தேர்தல்!!!!
சாதி/மதம் பார்த்து ஓட்டு போடும் வழக்கத்தை சகட்டு மேனிக்கு தூக்கி வீசி கழகங்களை கலங்கடித்துள்ளது இந்தத் தேர்தல்!!!!
ஆண்ட கட்சிகள் மீதுள்ள வெறுப்பு காரணமாக இந்த மிகப்பெரிய களமாற்றம் நடந்திருக்குது!!!!!
படத்துல மட்டும் பாத்துட்டு இருந்த பல எலிவேஷன் சீன்கள் நிஜத்தில் நடந்து இருக்குது அதுவும்
1.7 கோடி ஓட்டுகளாக
35% சதவிகித வாக்குகளாக!!!!
புதுசா வர்றவனை ஏற்கனவே இருக்கிறவன் அடிக்கிறதும் மிரட்டுறதும் தப்பே இல்லங்கிற அரசியலை முன்னெடுக்க நினைச்ச கட்சிகளுக்கு, “இந்த பூமி ஒன்னும் அவங்க அப்பன் வீட்டு சொத்து இல்லை”னு இந்த தேர்தல் அழுத்தம் திருத்தமாக நிருபிச்சிருக்குது!!!