தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி நடக்கிறது….!! தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!! சுறுசுறுப்பான அரசியல் கட்சிகள்.!! பின்னணி முழு விவரம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி நடக்கிறது….!! தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!! சுறுசுறுப்பான அரசியல் கட்சிகள்.
!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி துவங்குகிறது

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6

வேட்பு மனு பரிசீலினை ஏப்ரல் 7ம் தேதி

வேட்பு மனு திரும்ப பெற ஏப்ரல் 9ம் தேதி

வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி

வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி

தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்ததை தொடர்ந்து – தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் படம் அகற்றம்

5 மாநிலங்களிலும் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்*

மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளன.

2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் கலர் புகைப்படம் இடம்பெறும்.

– தலைமைத் தேர்தல் ஆணையர்.
தமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல்23 தேதி நடைபெறும், வாக்கு எண்ணிக்கை மே 4 தேதி- இந்திய தேர்தல் ஆணையம்.*
தமிழக சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

வாக்குப்பதிவு: 23/04/2026

வாக்கு எண்ணிக்கை: 04/05/2026

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

*தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலங்கள் எப்போது நிறைவு

  1. மேற்குவங்கம் – 7 மே,2026
  2. தமிழ்நாடு – 10 மே,2026
  3. அசாம் – 20 மே , 2026
  4. கேரளா – 23 மே , 2026
  5. புதுச்சேரி -15 ஜூன் , 2026

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் Model Code of Conduct (MCC) அமலுக்கு வருகிறது. இதை Election Commission of India அறிவிக்கிறது.

————————

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செய்யக்கூடியவை
(அரசு நிர்வாகம் தொடர்வதற்கான பணிகள்)

வழக்கமான அரசு நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம்

அலுவலக கூட்டங்கள் நடத்தலாம்.

அவசர நிர்வாக முடிவுகள் எடுக்கலாம்.

இயற்கை பேரிடர், வெள்ளம், புயல் போன்ற அவசர நிலைகளில் நடவடிக்கை எடுக்கலாம்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களை நிர்வகிக்கலாம்.

சட்டம்-ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.
ஆனால் தேர்தல் காலத்தில் புதிய அரசியல் அல்லது நலத்திட்ட அறிவிப்புகள் செய்ய முடியாது.

———————

முதல்வர் /அமைச்சர்கள் செய்யக்கூடாதவை

புதிய நலத்திட்டங்களை அறிவிக்க முடியாது

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட முடியாது

புதிய சாலை, பாலம், கட்டிடங்கள் போன்ற திட்டங்களை அறிவிக்க முடியாது

அரசு நிதியிலிருந்து புதிய உதவிகள் வழங்க முடியாது

அரசு செலவில் விளம்பரம் செய்ய முடியாது

அதிகாரிகளை மாற்ற முடியாது (Election Commission அனுமதி இல்லாமல்)

அரசு வாகனங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியாது

அரசு அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியாது

————————

அரசு அதிகாரிகள் செய்யக்கூடியவை

வழக்கமான நிர்வாக பணிகளை செய்யலாம்

சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளலாம்

தேர்தல் பணிகளில் ஈடுபடலாம்

அவசர அரசு சேவைகளை தொடரலாம்

ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசு சேவைகளை வழங்கலாம்

——————–

அரசு அதிகாரிகள் செய்யக்கூடாதவை

அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட முடியாது

தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்க முடியாது

அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது

புதிய அரசு திட்டங்களை தொடங்க முடியாது

அரசியல் கட்சிகளுக்காக அரசு வளங்களை பயன்படுத்த முடியாது

தேர்தல் காலத்தில் அதிகாரிகளை மாற்ற முடியாது (EC அனுமதி இல்லாமல்)

——————-

நலத்திட்ட உதவிகள் வழங்கலாமா?

பொதுவாக புதிய நலத்திட்ட உதவிகள் வழங்க முடியாது.

ஆனால் சில விதிவிலக்குகள் உள்ளன:

ஏற்கனவே ஒப்புதல் பெற்ற திட்டங்கள் தொடரலாம்.

முதியோர் ஓய்வூதியம் (Pension) வழங்கலாம்

கல்வி உதவித்தொகை (Scholarship) வழங்கலாம்.

பேரிடர் நிவாரணம் வழங்கலாம்

வழக்கமான சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடரலாம்

ஆனால் புதிய பயனாளிகளை சேர்த்து உதவி வழங்க முடியாது.

——————-

மக்கள் பிரதிநிதிகள் (MLA / MP) என்ன செய்யலாம்

தேர்தல் பிரச்சாரம் செய்யலாம்.

கட்சி கூட்டங்கள் நடத்தலாம்

பொதுமக்களை சந்திக்கலாம்

தேர்தல் தொடர்பான கருத்துகளை வெளியிடலாம்

அரசு அதிகாரிகளுக்கு புதிய திட்டம் செய்ய உத்தரவிட முடியாது

அரசு நிதியை பயன்படுத்த முடியாது

அரசு வாகனங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியாது

———–+++++

அரசு திட்டங்களின் விளம்பரம்

அரசு செலவில் புதிய விளம்பரங்கள் வெளியிட முடியாது

முதல்வர் அல்லது அமைச்சர்களின் புகைப்படங்களுடன் விளம்பரம் வெளியிட முடியாது

பொதுநல அறிவிப்புகள் மட்டும் வெளியிடலாம்

———————

தேர்தல் காலத்தில் பணம் மற்றும் பொருள் வழங்குதல்

வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல் சட்டவிரோதம்

பரிசுகள், பொருட்கள், மதுபானம் வழங்க முடியாது

தேர்தல் செலவு வரம்பை மீற முடியாது

———–++++

அரசு வாகனங்கள் மற்றும் அலுவலக பயன்பாடு

அரசு வாகனங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியாது

அரசு அலுவலகங்கள் தேர்தல் கூட்டங்களுக்கு பயன்படுத்த முடியாது.

அரசு அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்த முடியாது

—————-+-

தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள்
Election Commission of Indiaக்கு கீழ்கண்ட அதிகாரங்கள் உள்ளன:

அதிகாரிகளை மாற்ற உத்தரவிட முடியும்

தேர்தல் விதிமீறல்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியும்

தேர்தல் பிரச்சாரத்தை தடை செய்ய முடியும்

தேர்தல் அறிவிப்புகளை ரத்து செய்யவும் முடியும்

———-++-++++

முக்கியமாக Model Code of Conduct நோக்கம்:

தேர்தல் சமநிலையை பாதுகாப்பது

அரசு அதிகாரத்தை தேர்தலில் தவறாக பயன்படுத்தாமல் தடுப்பது
வாக்காளர்களுக்கு சுதந்திரமான சூழலை உருவாக்குவது.

தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் விதிகள்

  • “தேர்தல் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.
  • பிரசாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது.
  • தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசு பணியாளர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது.

*அரசு விழாக்கள் நடத்த கூடாது, அமைச்சர்கள் என்ற முறையில் எந்தவிதத்திலும் பரப்புரை மேற்கொள்ள கூடாது. அமைச்சர்கள் வேட்பாளராகவோ, வாக்குச்சாவடி முகவராகவோ கலந்து கொள்ளலாம்.

  • கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்”

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top