


திருத்தணி “மாலை முரசு ” நிருபர் தோழர் விநோத்குமார் அவர்களை தாக்கிய தே.மு.தி்.க வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அடியாட்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் ..! தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம்.. ! அக்கப்போர் நாளிதழ் akkappore.news

⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
20 – 04 – 2026
திருத்தணி “மாலை முரசு ” நிருபர் தோழர் விநோத்குமார் அவர்களை தாக்கிய தே.மு.தி்.க வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அடியாட்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் !
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம் !
⚫
திருத்தணி, திமுக கூட்டணி கட்சியின் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களது தனியார் பள்ளி வாகனத்தை தேர்தல் விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்திற்கு இரவு நேரத்தில் பயன்படுத்தியதை செய்தி சேகரித்து செய்தி வெளியிட்ட மாலை முரசு தொலைக்காட்சி செய்தியாளர் தோழர் வினோத் குமார் இவரை பட்டப்பகலில் வேட்பாளரை ஆதரவாளர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி கத்தியை காட்டி மிரட்டி சென்று உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தகைய செயலுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
உடனடியாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் உடனடி நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வேண்டும் என்றும்,
தேர்தல் பணிகளில் ஈடுபடும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்,
பத்திரிகையாளரை தாக்கிய குண்டர்கள் மீது உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை வைக்கிறது !
- *தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் *தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ்.*
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫

