திருமலா திருப்பதி கோவில் போல திருப்பதி தேவஸ்தானம் மூலம் தமிழகத்தில் எதிர்காலத்தில் அமைக்கப்படும்…!! ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி..!! வழக்கறிஞர், அக்கப்போர் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் akkappore.news சொடுக்குங்க

திருமலா திருப்பதி கோவில் போல திருப்பதி தேவஸ்தானம் மூலம் தமிழகத்தில் எதிர்காலத்தில் அமைக்கப்படும்…!! ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி..!! வழக்கறிஞர், அக்கப்போர் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் akkappore.news சொடுக்குங்க

நேற்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தமிழக பாஜகத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கான தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரைக்கு விமானத்தில் வந்திருந்தார். அவருடன் அங்கிருந்து சாத்தூர் போவதற்கான ஹெலிகாப்டர் பயணத்தில் நானும் அவருடன் பேசிக்கொண்டே உடன் வந்தேன். சாத்தூர் வந்து இறங்கி ஏறக்குறைய ஆறு மணி நேரம் அவருடன் பல்வேறு தமிழ்நாட்டு விவரங்களை நான் சொல்லச் சொல்ல அவர் மிக பொறுமையாகவும் கவனமாகவும் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு குறித்த அவரது சில அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்! சாத்தூரில் நடந்த இன்றைய இறுதி நாள் பிரச்சாரத்திலும் கலந்து மக்கள் மத்தியில் அவர் சிறப்பாகப் பேசி பிரச்சாரத்தை முடித்து வைத்தார்! மீண்டும் ஐதராபாத் செல்வ மதுரை விமான நிலையம் செல்லும் வழியிலும் அதே ஹெலிகாப்டரில் அவரை வழி அனுப்பவும் போயிருந்தேன்*!.

தமிழ்நாட்டின் நதிநீர் பிரச்சனைகள் பாலாறு பஆறு மற்றும் செண்பகவல்லி அணை சீர்திருத்தங்கள் பிறகு இங்குள்ள பொருனை கரிசல் நில மக்களின் வாழ்க்கை முறைகளையும் நுட்பமாக அவர்களின் தேவைகள்உள்ளிட்டுத் தெரிந்து கொண்டார்.

ஆந்திராவை மிக நவீனமாக வடிவமைத்த சிற்பிகளில் ஒருவர் என்று போற்றப்படும் சந்திரபாபு அவர்கள் இந்த பிரச்சாரத்தில் கிராமப்புற விவசாய நில மக்களின் போதாமைகளைத் தெரிந்து கொண்டது மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் இத்தகைய பிரச்சனைகளைத் தான் கையாளுகிற முறைகள் குறித்தும் ஆர்வமாக பேசினார்!

. மிக நுட்பமாக அவை பற்றி என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது. அது மட்டுமல்ல இந்த மண்ணில் பரவலாக வாழக்கூடிய நாயக்கர் மக்களின் வாழ்க்கைச் சூழல் அவர்களுடைய வரலாற்று இருப்பு மற்றும் பொருளியல் வாழ்வு குறித்து எல்லாம் மிக அக்கறையாகக் கேட்டுக் கொண்டார்.


ஏறக்குறைய 1000 ஆண்டுகள் நாயக்கர் கால தொடர்புகள் வாழ்ந்து தமிழ் மக்களாகவே கரைந்து நிற்கிற அவர்களில் எதிர்காலம் குறித்த அக்கறை அவரது பேச்சில் தொனித்தது!


மிக முக்கியமாக அவர் இந்த நேரங்களில் வாக்குறுதி எதுவும் தரக்கூடாது என்றாலும் சாத்தூர் கோவில் பட்டி திருநெல்வேலி கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் சென்னை வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருமலா திருப்பதி கோவில் போன்ற ஒன்றை
திருப்பதி தேவஸ்தானம் மூலம் எதிர்காலத்தில் அமைக்கப்படும் என்ற உறுதியை தனிப்பட்ட முறையில் அவரது ஆர்வமாகவும் விரைவில் அதற்கான முயற்சிகள் நடக்கும் என்றும் தெரிவித்தார்!

. தேர்தல் நேரத்தில் இதைத் தெரிவிக்கக் கூடாது என்றாலும் திரு நயினார் நாகேந்திரன் அவர்களின் விருப்பத்திற்கும் வேண்டுகோளுக்கும் ஏற்ப அத்திட்டம் தேவஸ்தான மூலம் இங்கு நிறைவேற்றி தரப்படும் என்று சொன்னார். அவரது வரவு பிரச்சாரத்திற்கு மட்டுமல்லாது பகுதி மக்களுடைய நல்வாழ்விற்கான ஒரு பயணமாகவும் அமைந்தது. அவரை நல்லபடியாக கௌரவித்து இப்போது தான் மதுரை விமான நிலையத்தில வழி அனுப்பி விட்டு வருகிறேன்.

வழக்கறிஞர், அக்கப்போர் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

சந்திரபாபுநாயுடு

Elections2026

ksrpost

22-4-2026.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top