தூத்துக்குடி ஜெபஸ்டியார் கெபி திருவிழாவை முன்னிட்டு பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை ஸ்டாா்வின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…!!
ஆர்.கே.விக்கிரம பூபதி,எம்.ஏ., எம்.பில்., முதன்மை தலைமை செய்தி ஆசிரியர் அக்கப்போர் நாளிதழ், Akkappore.com சொடுக்குங்க

தூத்துக்குடி மறக்குடி தெருவில் உள்ள பழமை வாய்ந்த செபஸ்தியார் கெபி திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான செபஸ்தியார் திருவிழாவை முன்னிட்டு செபஸ்தியார் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குரூஸ்பர்னாந் நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்ட் தலைமை தாங்கினார் செயலாளர் சசி முன்னிலை வைத்தார்.

பனி மயமாதா பேராலய பங்கு தந்தை ஸ்டார்வின் உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை செய்து தொடர்ந்து ஏழு பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார். இதை தொடர்ந்து 500 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணியினர் வர்கீஸ், பிராங்கிளின், தினேஷ், கிராசிங்டன், ஆரோண், வளன், ஆண்ட்ரூஸ், ஜெனிஸ், அரவிந்த், ஸ்வீட்டஸ், ஜேபி, அஜித், ஸ்டெபி, ரியாஸ், கிரஸ்வின், அஜய், ஜாய்சன், ஜஸ்பர், சோல்ஜர், டேனி, ஜாய்சன், செல்ட்டன், பிரைட்டன், செல்மன், மோத்தா, கேஸ்ட்ரோ மகளிர் அணி வெர்ஜின், விஜிலியா, ஜெசிந்தா, உள்பட பலா் கலந்து கொண்டனர்.

குருஸ்பர்னாந்த் நற்பணி மன்ற அமைப்பாளர் எட்வின் பாண்டியன் நன்றி கூறினார்.

ஆர்.கே.விக்கிரம பூபதி,எம்.ஏ., எம்.பில்., முதன்மை தலைமை செய்தி ஆசிரியர் அக்கப்போர் நாளிதழ், Akkappore.com சொடுக்குங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)