
பெங்களூருக்கு கல்விச்சுற்றுலா செல்லும் பாலத்துறை அரசு பள்ளி மாணவர்கள்…!! சத்தமில்லாமல் ஒரு சாதனை….!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

பெங்களூருக்கு சுற்றுலா செல்ல இருக்கும் பாலத்துறை நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு பயணம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகா பாலத்துறையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மொத்தம் 118 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு சுல்வி மற்றும் அனுபனச் சுற்றுலா
சென்றுவர, மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவவர் ஆகியோரிடம் அனு மதி பெற்று, கல்வி துறை சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டது. வரும் 27ம் தேதி அன்று காலை கோவை ரயில் நிலையத்தில் இருந்து, உதய் எகஸ்பிரஸ் ரயில் நம் மூயம், பெங்களூரு செல்கின்றனர்.
மூன்று நாள் கற்றுப்பயணத்தை முடித்துகொண்டு மீண்டும் மார்ச் 3 ம் அன்று மதியம் விமானம் மூலம் கோவை வருகின்றனர். ரயிலில் சென்று விமானத்தில் திரும்பி வர இருப்பதால், சுற்றுலா செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் 23ம் தேதி பாலத்துறை நடுநிலைப்பள்ளியில் சுற்றுலா செய்ய உள்ள மாணவர்களுக்கு பயணம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
