போதும் மனசு வலிக்குது..!! என்னை உட்டுடுங்… நடிகர் ரவி மோகனை பிரிந்து விட்டேன்…!!கெனிஷா ஆவேசமான பதிவு..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

போதும் மனசு வலிக்குது..!! நடிகர் ரவி மோகனை பிரிந்து விட்டேன்…!!
கெனிஷா ஆவேசமா பதிவு..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

அன்புள்ள அனைவருக்கும்,

நான் பேச வேண்டியதை விட அதிகமாக பேசிவிட்டேன். பேசக்கூடாத விஷயங்களையும் உணர்ச்சிவசப்பட்டு சொல்லிவிட்டேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது, அதில் பெரும்பாலானவை தேவையற்றவைதான்.

இந்தக் கதைக்குள் நான் அன்போடும் நம்பிக்கையோடும் வந்தேன். ஆனால் இப்போது அமைதியாக விலகிச் செல்கிறேன்.

சில இடங்கள் சத்தம், அகங்காரம், குற்றச்சாட்டு, கற்பனை கதைகள் ஆகியவற்றால் நிரம்பி விடுகின்றன. அப்போது நல்ல மனசுக்கும், உண்மையான அன்புக்கும் அங்கே இடமே இல்லாமல் போய்விடுகிறது. அப்படி ஆன பிறகு, அன்பு கூட தேவையில்லாத ஒன்றாக உணரப்படுகிறது.

ஏற்கனவே உலகம் ஒரு மனிதரைப் பற்றி தன் முடிவை எடுத்துவிட்ட நிலையில், அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்து நான் என்னுடைய வாழ்க்கையின் சில பகுதிகளை அர்ப்பணித்தேன். ஆனால் இப்போது ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரிகிறது — வெளிப்புற காட்சிகளுக்கும் வதந்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்த உலகத்தில், நல்ல மனசும் கனிவும் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.

பொது மக்கள், சினிமா துறை, கருத்து சொல்லுபவர்கள், அவரை விரும்புபவர்கள், வெறுப்பவர்கள், காப்பாற்ற முயற்சிப்பவர்கள், கேலி செய்பவர்கள், அவரது வாழ்க்கையில் உரிமை கொண்டாடுபவர்கள் — இனிமேல் அவர் முழுமையாக உங்களுடையவர்.

இனி எந்த விளக்கமும் இல்லை. இனி எந்த பாதுகாப்பும் இல்லை.

எனக்கே சொந்தமில்லாத போராட்டங்களில் இனிமேல் ஈடுபட மாட்டேன். நல்ல மனிதர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்து நான் ஆதரவு கொடுத்தேன். ஆனால் இப்போது புரிகிறது — இந்த உலகம் பொய் பேசுபவர்கள், ஏமாற்றுபவர்கள், மற்றவர்களை பயன்படுத்துபவர்கள் வாழும் இடமாக மாறிவிட்டது.

அதனால், அமைதியுடனும் அன்புடனும், முழுமையாக விலகிச் செல்கிறேன். என் மீது சுமத்தப்பட்டிருந்த எல்லா பொறுப்புகளையும் விட்டுவிடுகிறேன்.

உண்மையான அன்பு, விசுவாசம், மென்மை ஆகியவை என்ன செய்ய முடியும் என்பதை இந்த உலகம் பார்க்க அனுமதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் இன்றைய தலைமுறை மென்மையையும் உண்மையான அன்பையும் நம்புவதில்லை போல. ஒருவரை அழிப்பது, அவரை உண்மையாக நேசிப்பதை விட எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மக்கள் உண்மையை விட, உணர்ச்சியில் உருவாக்கப்பட்ட கதைகளையே அதிகமாக நம்புகிறார்கள்.

ஆனால் பரவாயில்லை. நீங்கள் விரும்பியது கிடைத்துவிட்டது.

அதனால் இன்று முதல் நான் எதிர்த்து போராடுவதை நிறுத்துகிறேன். என்னை தவறாக புரிந்துகொள்ளத் தீர்மானித்தவர்களிடம் என் நல்ல மனதை நிரூபிக்க முயற்சிப்பதையும் நிறுத்துகிறேன்.

நான் சென்னையை விட்டு வெளியேறிவிட்டேன். என் இசை, என் சிகிச்சை, இதுவரை என் வாழ்க்கையாக இருந்த அனைத்தையும் விட்டு விலகிவிட்டேன்.

மனிதர்கள், கடவுள் உருவாக்கிய நல்ல விஷயங்களையும் உடைத்து விட முடியும் என்பது உண்மையாக இருக்கலாம்.

ஆன்லைன் தாக்குதல், சூழ்ச்சி, மன அழுத்தம் — இவையால்தான் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். அதனுடன் இன்ஸ்டாகிராம் உட்பட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் வெளியேறுகிறேன். கடவுள் வெற்றி பெறும் நாள் வரைக்கும்.

என் நண்பர்கள், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் அனைவரும் எனக்கு தேவையான தனியுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இன்றிலிருந்து — பெண்ணியம், நீங்கள் வென்றுவிட்டீர்கள். மகிழ்ச்சி, நீங்கள் தோற்றுவிட்டீர்கள்.

அன்பும் ஒளியும்,
கெனிஷா பிரான்சிஸ்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top