மதிமுக புத்தி சிகாமணிகளுக்கு… ஆதாரம் இல்லாமல் என்னிடம் பேச வேண்டாம்…!! மூத்த வழக்கறிஞர், அக்கப்போர் நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எச்ரிக்கை akkappore.news சொடுக்குங்க

நேற்று செண்பகவல்லி அணை

மதிமுக புத்தி சிகாமணிகளுக்கு
… ஆதாரம் இல்லாமல் என்னிடம் பேச வேண்டாம்…!! மூத்த வழக்கறிஞர், அக்கப்போர் நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எச்ரிக்கை akkappore.news சொடுக்குங்க

நேற்று செண்பகவல்லி அணை உடைப்பு குறித்து வாசுதேவ நல்லூர் பகுதி மக்களின் முக நூல் முறையீட்டைப் பதிவு செய்திருந்தேன். பார்டர் எல்லை பாலசிங்கம் அவர்களின் பதிவையும் எடுத்துப் போட்டு இருந்தேன். நேற்றுப் பிறந்த மதிமுக வைச் சேர்ந்த அரைவேக்காடுகள் நீ என்ன செண்பகவல்லி அணைக்குப் பிடுங்கினாய் என்று பின்னூட்டம் போட்டார்கள்! அட அறிவு கெட்ட அரைவேக்காடுகளே! கடந்த காலங்களில் நான் என்ன பிடிங்கினேன் என்பதைத் தினமணிச் செய்திகளைத் தொடர்ந்து பார்த்து வந்திருந்தால் தானே உங்களுக்குத் தெரியும்!

அந்த செய்திகளைப் பார்த்து இருந்தால் இந்த கேள்வியைக் கேட்டிருக்க மாட்டீர்கள்! எதுவும் தெரியாது!வரலாறும்
தெரியாது! தன்னை சுற்றி நடக்கின்ற சம்பவங்கள் ஒன்றும் புரியாது!

ஒரு பின்னூட்டம் போட்டு விட்டுப் பெரிய புரட்சிக்காரர்கள் மாதிரித் திரிவது! நான் அந்த அணை உடைப்பு சம்பந்தமாக எத்தனை முறை தாவாவும் வழக்கும் தொடுத்து இருக்கிறேன்

சங்கரன் கோவிலிலும் வாசுதேவநல்லூரிலும் கலந்துகொண்டு நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள்…… எதையும் தெரியாத இவர்கள் எல்லாம் இரண்டாயிரத்தில் பிறந்தவர்களாகத் தான் இருப்பார்கள். 70 80களில் வைகோவிற்கு நான் செய்த உதவிகள் பற்றி எல்லாம் உங்களுக்கு என்ன தெரியும்? அவ்வளவு உடனிருந்தும் செயலாற்றியும் வைகோ எனக்கு ஒன்றும் செய்யவில்லையே?

ஒரு கருத்தைச் சொல்லுகிற நேர்மையும் திட சித்தமும் உள்ள என்னிடம் நீ என்ன புடுங்கினாய் என்று கேட்பதற்கு உங்களைப் போன்ற முட்டாள்கள் தேவையில்லை! வரலாறு தெரிந்தவர்கள் அரசியல் புரிந்தவர்கள் யாரும் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்க மாட்டார்கள்!

உங்களின் இந்த அரைக் கூச்சல்கள் வெற்று வேட்டுத்தனமாக ஊரில் வேலை அற்றுத் திரிந்து கொண்டு அதற்காக எதையாவது சொல்லிக்கொண்டு திரிவதற்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை! அப்புறம் எனக்கு தெரிந்தவற்றை அடுக்கு அடுக்காக வெளியில் சொன்னால் வைகோ முதல் யாரும்
தாங்க மாட்டீர்கள்? அவ்வளவு தரவுகள் உள்ளன.

1)https://www.dinamani.com/tenkasi/2025/Jul/10/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
•••

மூத்த வழக்கறிஞர், அக்கப்போர் நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்.

?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top