விசில் போடு -கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பழனி தவெக தொண்டர்கள்…!! திண்டுக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர் பழநி கண்ணன், அக்கப்போர் நாளிதழ், Akkappore.news சொடுக்குங்க
தமிழக வெற்றிக்கழகத்துக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக தமிழக வெற்றிக்கழக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக்ராஜன், செயற்குழு உறுப்பினர் பழனி பாலன் ஆகியோர் தலைமையில் பழனி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் விசில் வழங்கி கொண்டாடும் நிகழ்ச்சி நடந்தது. கட்சியின் நகர, ஒன்றிய, இளைஞரணி, தொண்டரணி என பல்வேறு தரப்பு நிர்வாகிகள் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு மாரியம்மன் கோவில், காரமடை ஆகிய இடங்களிலும் தவெக சார்பாக கொண்டாடப்பட்டது.