
ஆகவே….மாண்புமிகு மகா ஜனங்களே…!! மறக்காம ஓட்டு போடுங்க…!! – விழிப்புணர்வு தொடர் பத்திரிக்கையாளர், கரூர் p.ராஜலெஷ்மி செல்வி M.Com., M.B.A., உதவி ஆசிரியர், அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க


மாண்புமிகு மகா ஜனங்களுக்கு வணக்கம்..…!!
மாண்புமிகு மகா ஜனங்களுக்கு வணக்கம்…
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் வாக்களிக்கும் வாய்ப்பு உள்ளது.வாக்காளர்களாகிய நாம் தான் நம்மை ஆளும் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறோம்.
வாக்காளன் மதிக்கப்படுகிறானா மிதிக்கப்படுகிறானா என்று எண்ணாமல் நாம் ஒவ்வொருவரும் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதற்காக நம் முன்னோர்கள் பலரும் போராடி வெற்றி கண்டுள்ளனர்.
சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நமக்கானது. உங்கள் தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்கள் உங்களுக்கு நம்பிக்கையற்றவர்களாகத் தோன்றினால் நோட்டா (எவருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை) என்ற முறையிலும் நீங்கள் வாக்களிக்கலாம்
இதன் மூலம் புரட்சி ஏற்படுமா என்றால் அதிகப்படியான வாக்குகள் நோட்டாவுக்கு விழும்போது நிச்சயம் மறுபரிசீலனை செய்யப்படும்.
ஆகவே…மாண்புமிகு ஜனங்களே….மறக்காம ஓட்டு போடுங்க
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 326 (Article 326), மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வயது வந்தோர் வாக்குரிமையை உறுதி செய்கிறது.
18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும், குடியிருப்பு, மனநிலை, குற்றம் அல்லது ஊழல் நடைமுறைகள் அடிப்படையில் தகுதியிழப்பு இல்லாத ஒருவர் தம்மை வாக்காளராகப் பதிவு செய்ய உரிமை உண்டு.
வாக்களிப்பது என்பது மக்களின் அடிப்படையான உரிமை மற்றும் கடமையாகும். 18 வயது வந்த ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் அவ்வப்போது வெளியாகும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களின் கவனம் பெற்று வருகிறது.
வாக்குச்சாவடி சீட்டு
(Booth Slip) என்பது தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு வழங்கப்படும், அவர்களின் வாக்குச்சாவடி எண், பெயர் மற்றும் வரிசை எண் அடங்கிய ஒரு சீட்டு ஆகும். இது வாக்காளர் அடையாள அட்டை (EPIC) அல்ல, ஆனால் வாக்களிக்கும் நாளில் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பதை எளிதாக்க உதவும் ஒரு ஆவணம்.
• வாக்குச்சாவடி சீட்டின் மூலம் வாக்குச்சாவடியைக் கண்டறியவும், வாக்காளர் பட்டியலில் பெயரை எளிதாக சரிபார்க்கவும் உதவுகிறது.
• வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் வீடு தேடி விநியோகிக்கப்படும்.
• வாக்காளர் சேவை இணையதளம் (Voter’s Services Portal) மூலம் வாக்காளர் அடையாள அட்டை எண் (EPIC) பயன்படுத்தி டவுன்லோட் செய்யலாம்.
• பூத் ஸ்லிப் இல்லாத பட்சத்தில், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பிற 11 அடையாள ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.
குறிப்பு: பூத் ஸ்லிப்பில் உள்ள தகவல்கள், வாக்காளர் பட்டியலில் உள்ளபடி சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாத போது
- ஆதார் அட்டை,
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி அடையாள அட்டை.
- புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்.
- தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை அல்லது ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை.
- ஓட்டுநர் உரிமம்.
- வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை.
- தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை.
- இந்திய கடவுச்சீட்டு.
- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
- மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்.
- பாராளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை.
- இந்திய அரசின் சமூக நீதி மற்றுkம் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை.
இப்படி 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்” என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது..
பத்திரிக்கையாளர், கரூர் P. ராஜலெஷ்மி செல்வி M.Com., M.B.A., உதவி ஆசிரியர், அக்கப்போர் நாளிதழ்

