இந்தியாவின் “ஆ….” ச்சரியம் ஊட்டும் அதிசய கிராமங்கள்….!! சமூக, விழிப்புணர்வு தொடர் பத்திரிக்கையாளர், கரூர் P.ராஜலெஷ்மி செல்வி M.Com., M.B.A., உதவி ஆசிரியர், அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

இந்தியாவின் “ஆ….” ச்சரியம் ஊட்டும் அதிசய கிராமங்கள்….!! சமூக, விழிப்புணர்வு தொடர் பத்திரிக்கையாளர், கரூர் P.ராஜலெஷ்மி செல்வி M.Com., M.B.A., உதவி ஆசிரியர், அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

இந்தியாவின் விசித்திர கிராமங்கள்
விசித்திரம் என்பது இயற்கைக்கு மாறான, நாம் இதுவரை கண்டிராத, நடைமுறையில் சாத்தியக் கூறுகள் இல்லாத, இயற்கையாலும், அறிவியலாலும் நிகழக்கூடிய அசாத்திய நிகழ்வுகளை நாம் விசித்திரம் என்கிறோம்.

நம்மைச்சுற்றிலும் விசித்திரம் நிறைந்துள்ளது என்பதை நாம் அறிவோம். உலகின் பல விசித்திர நிகழ்வுகள், இயற்கையாகவும், மனிதனாலும் தினம்தோறும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு தனிப்பட்ட நபரோ, மிருகங்களோ அல்லது கூட்டமோ விசித்திரமான காரியங்களை செய்யலாம்.

ஆனால் உலகின் பல கிராமங்களில் இருக்கும் மக்கள் விசித்திரமான சில காரியங்களை செய்கின்றனர்.

அதன்படி இந்தியாவில் இருக்கும் சில விசித்திரமங்களைப் பற்றித்தான் நாம் இந்தக் கட்டுரையில் காணவுள்ளோம்.

அதுபோல் இந்தியாவின் சில முக்கியமான விசித்திர கிராமங்கள்.

கதவு இல்லாத வீடுகள் : இந்தியாவின் வட மாநிலங்களில் முக்கிய மாநிலமாகக் கருதப்படும் மஹாராஷ்டிர மாநிலத்தில் அஹமது நகர் மாவட்டத்தில் நெவாசா தாலுகாவில் சனி ஷிங்னாபூர் என்ற கிராமத்தில் தான் கதவுகளே இல்லாத வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஷீரடியில் இருந்து சுமார் 65 கிமீ, புனேவில் இருந்து 160 கிமீ, மும்பையிலிருந்து 350 கிமீ தொலைவில் உள்ளது.

இங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் வங்கிகளுக்குக் கூட கதவுகள் இல்லை. திருட்டு பயம் இல்லாத ஊராக இது கருதப்படுகிறது. சனிபகவான் சுயம்புவாக தோன்றி இங்குள்ள மக்களுக்கு அருள்பாளிப்பதாகக் கருதப்படுகிறது.

பாம்பு கிராமம்:

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் (Shetphal) கிராமம், விஷப்பாம்புகளுடன் மனிதர்கள் அச்சமின்றி இணைந்து வாழும் விசித்திரமான “பாம்பு கிராமம்” என்று புகழப்படுகிறது.

இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் பாம்புகள் சுதந்திரமாக உலாவவும், ஓய்வெடுக்கவும் ‘தேவஸ்தானம்’ எனப்படும் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாம்புகள் ஒருபோதும் கிராம மக்களைக் கடித்ததில்லை என்று நம்பப்படுகிறது.

இந்த கிராமம் புனேவிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இடைவெளியை பின்பற்றும் கிராமம் : சுத்தம் சுகம் தரும் என்று நாம் படித்திருந்தாலும் மரியாதை நிமித்தமாக நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் போது கைகுளுக்கி வணக்கம் செலுத்தி வழக்கம் உலக அளவில் உள்ளது. 2020 ஆம் ஆண்டு கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகு உலகில் அனைவரும் இடைவெளியைப் பின்பற்றி வருகிறோம்.
ஆனால் இந்த கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக தொட்டு பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மனிதர்களையோ கோவிலையோ தொட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்தியாவின் பாரடைஸ் என அழைக்கப்படும் இமாச்சலப் பிரதேசத்தின் குலு பள்ளத்தாக்கில் உள்ள மலானா (Malana), உலகின் பழமையான ஜனநாயகங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு தனித்துவமான மற்றும் பழமையான கிராமமாகும்.

இது அதன் தனித்துவமான கலாச்சாரம், ‘கனாஷி’ மொழி மற்றும் கண்டிப்பான விதிகள், குறிப்பாக வெளியாட்களைத் தொடக்கூடாது என்ற கட்டுப்பாட்டிற்கு (Touch-me-not) பெயர் பெற்றது.

இது பார்வதி பள்ளத்தாக்கில், சந்திரகானி மற்றும் தியோடிபா சிகரங்களுக்கு அருகில் 2,652 மீட்டர் (8,701 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

மலானியர்கள் தங்களை அலெக்சாண்டரின் படையினரின் சந்ததியினராகக் கருதுகின்றனர் மற்றும் ‘ஜம்லு ரிஷி’யை வழிபடுகின்றனர்.

கிராம மக்கள் தங்களை அல்லது கோவிலைத் தொடுவதை அனுமதிப்பதில்லை, மீறினால் அபராதம் விதிக்கப்படும்.

இப்பகுதி உலகளாவிய தரம் வாய்ந்த ‘மலானா கிரீம்’ (Hashish) தயாரிப்பிற்கு பிரபலமானது.

ஜாரி (Jari) கிராமத்திலிருந்து மலானா கிராமத்திற்கு செல்ல 2 மணி நேரப் பயணம் தேவைப்படுகிறது,

இது ஒரு சாகசப் பயணமாக இருக்கும்.

தூய்மையான கிராமம் : சுத்தம் சோறு போடும்னு சொன்னா இன்றைய காலகட்டத்தில் பலர் சிரிப்பார்கள். ஆனால் சுத்தத்திற்காக மட்டுமே ஒரு கிராமம் அதிக அளவில் போற்றப்படுகிறது என்றால் அது மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் அமைந்துள்ள மவ்லின்னோங் (Mawlynnong), தான். ஆசியாவின் தூய்மையான கிராமம் என்ற பெருமையைப் பெற்ற, இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் சுற்றுரலா தலமாகும்.

“கடவுளின் சொந்தத் தோட்டம்” (God’s Own Garden) என்று அழைக்கப்படும் இந்த கிராமம், இயற்கை பாதுகாப்பு மற்றும் சமூகக் கட்டுப்பாட்டிற்கு உலகளவில் முன்மாதிரியாகத் திகழ்கிறது.

2003 ஆம் ஆண்டில் ஆசியாவின் தூய்மையான கிராமமாகவும், பின்னர் இந்தியாவின் தூய்மையான கிராமமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இங்குள்ள தெருக்கள் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன, குப்பைகளைத் தொட்டியில் போடுவது இவர்களின் கலாச்சாரம்.

லிவிங் ரூட் பிரிட்ஜ் (Living Root Bridge): இங்குள்ள வாழும் வேர் பாலம், ரப்பர் மரங்களின் வேர்களைக் கொண்டு இயற்கையாகவே உருவாக்கப்பட்ட ஒரு அதிசய பொறியியல் ஆகும்.

காசி (Khasi) பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், தாய்வழி சமூக முறை (Matrilineal System) பின்பற்றப்படுகிறது. சொத்துக்கள் தாயிடமிருந்து மகளுக்கு கைமாறுகின்றன.

கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து சுற்றுப்புறத்தைப் பராமரிக்கின்றனர்.

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைத் தொட்டிகள் இங்கு குறிப்பிடத்தக்கவை. ஷில்லாங்கில் இருந்து சுமார் 76 கி.மீ தொலைவில் உள்ள இந்த கிராமம், அடர்ந்த காடுகள் மற்றும் பசுமையான நிலப்பரப்புகளுக்கு நடுவே அமைந்துள்ளது.
மவ்லின்னோங் கிராமம்,

இயற்கையோடு இயைந்த வாழ்விற்கும், தூய்மையான சுற்றுச்சூழலுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தொடரும்.,….

பத்திரிக்கையாளர், கரூர் P.ராஜலெஷ்மி செல்வி M.Com., M.B.A., உதவி ஆசிரியர், அக்கப்போர் நாளிதழ் akkappore.news

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top