
தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்களும் மாவீரர்களும் தந்த ஆசியோடு, அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலோடு, நம் முன்னத்தி ஏர்களான பெருந்தலைவர் காமராஜர், ஐயா மார்ஷல் நேசமணி, தோழர் ஜீவானந்தம், அம்மா மரிய லூர்தம்மள் சைமன், ஐயா இரட்டைமலை சீனிவாசனார் போன்ற தமிழின ஆளுமைகளை வணங்கி, பொதுவுடமை புரட்சியாளர் ஜீவானந்தம் பிறந்த மண்ணாம் பூதப்பாண்டி தாலுகா அலுவலகத்தில் பெரும்திரளான நாம் தமிழர் உறவுகளுடன் வரும் சட்டமன்ற தேர்தலிலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தோம்.
நம் பெரும் உழைப்பின் பலனை காண்பதற்கான தேர்தல் எனும் போர்க் களத்தில் அண்ணன் அறிவித்த தளபதியாய் முதல் அடியை எடுத்து வைத்த இத்தருணம் மிகவும் நெகழ்ச்சியுடனும் அதே நேரத்தில் நம் உறவுகளாம் படை வீரர்கள் தந்த உற்சாகத்தால் பெரும் எழுச்சியுடனும் நடந்துமுடிந்தது.
மண் மீதும் மக்கள் மீதும் பேரன்பு கொண்டு, இந்த சமூகத்திலும் அமைப்பிலும் மாற்றத்தை கொண்டு வரும் பேராவலில் இந்த மக்களரசியல் களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமக்கு, நமது மக்கள் அதிகாரத்தை கையளிப்பார்கள் என்ற பெரும் நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் நிற்கிறோம்.
இந்த பெருவாய்ப்பை தந்த நாம் தமிழர் கட்சிக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கும், என்னுடன் தோளோடு தோளாக நின்று பணியாற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கும், நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றையதினம் தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த சக நாம் தமிழர் வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
வெல்வோம்.
வாக்களிப்பீர்_விவசாயி
மக்களோடு_மரியஜெனிபர் #NaamTamilar
எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே

