காலண்டர், டைரிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் நேரில் வழங்கிய தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் …!! ஆர்.கே.விக்கிரம பூபதி, எம்.ஏ., எம்.பில்., முதன்மை தலைமை செய்தி ஆசிரியர் அக்கப்போர் நாளிதழ், Akkappore.news சொடுக்குங்க

காலண்டர், டைரிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் நேரில் வழங்கிய தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் …!! ஆர்.கே.விக்கிரம பூபதி, எம்.ஏ., எம்.பில்., முதன்மை தலைமை செய்தி ஆசிரியர் அக்கப்போர் நாளிதழ், Akkappore.news சொடுக்குங்க

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் 2026ம் ஆண்டிற்கான டைரி, காலண்டர் மற்றும் புத்தாண்டையொட்டி இனிப்பு, காரம், பேனா, குங்கும சிமிழ் ஆகிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்ச்சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜீ, துணை தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன் ஆத்திமுத்து ஆகியோர் முன்னிலையில் கௌரவ ஆலோசகர் அருண் உறுப்பினர்களுக்கு வழங்கி தொடங்கி வைக்க.பட்டது.

பின்னர் அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டும். தொடர்ந்து உறுப்பினர்களின் நலன் காக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் மாரிராஜா, கண்ணன், முத்துராமன், ராஜன், உறுப்பினர்கள் ரவி, அருள்ராஜ், கற்பகநாதன், பாலகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர்.

அதனை தொடர்ந்து கணேஷ்நகாில் உள்ள முகாம் அலுவலகத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், கௌரவ ஆலோசகர் ஆத்திமுத்து, உறுப்பினா் மாாிமுத்து ஆகியோர் வழங்கினார்கள்.
தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளா் ராமஜெயம், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமாா், அரசு வழக்கறிஞர் பூங்குமாா், வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், உள்பட பலர் உடனிருந்தனர்.

ஆர்.கே.விக்கிரம பூபதி,எம்.ஏ., எம்.பில்., முதன்மை தலைமை செய்தி ஆசிரியர் அக்கப்போர் நாளிதழ், Akkappore.com சொடுக்குங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top