குளத்தூர் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டங்களில் நடந்த ஊழலை ஆதரித்த திட்ட இயக்குனர் முறைகேட்டுக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு போராட்டம்…!!*
*சீட்டா நிறுவனர், சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு நென்மேலியில் இன்று ஜனவரி 3 ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்…! அக்கப்போர் நாளிதழ் Akkappore.com சொடுக்குங்க

இன்று 3- 1-2026, தூத்துக்குடி மாவட்டத்தில், குளத்தூர் ஊராட்சியில் நடந்த ஊழலை தனி விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை செய்யவும், விசாரணையில் ஊழல் செய்யப்பட்டது உண்மை எனில், குளத்தூர் ஊராட்சியில் ஊழல் செய்ய உடந்தையாகவும், குளத்தூர் ஊராட்சியில் ஊழல் நடந்ததாக புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காமல் கால தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து இந்த குளத்தூர் ஊராட்சியில் ஊழல் செய்ய காரணமான, ஊழலுக்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய கேட்டு தூத்துக்குடி மாவட்டத்தை லஞ்சம் இல்லாத மாவட்டமாக மாற்றும் சீட்டாவின் சிறப்பு திட்டத்தின் தலைவர் ப பாபு @ லஞ்ச ஒழிப்பு ப பாபு இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இன்று காலை துவங்கிய அடையாள உண்ணாவிரத போராட்டம் மாலை வரை நடக்கிறது.

இந்த போராட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு செயலர் அமுதா ஐஏஎஸ் நேரடி கவனத்திற்கு சென்றுள்ளது.

இதனால் தூத்துக்குடி ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் இடையே கடும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *