சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!! அக்கப்போர் நாளிதழ் வரவேற்பு…!! akkappore.news சொடுக்குங்க

: சாத்தான்குளம் வழக்கு: காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை


  • சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்தனர். இதுதொடர்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, காவலர்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் உதவி ஆய்வாளர் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

: சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்தது ஏன்? – மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பின் விவரம்


  • ஒரே நேரத்தில் தந்தை மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது.

சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர்.

காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடி சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது.

குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும்.

சட்டத்தை காக்க வேண்டியவர்களே குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.

வேலியே பயிரை மேய்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

  • தந்தை மகன் இருவர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

சட்ட திட்டங்களை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர்.

இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும்.

குற்றவாளிகளை சார்ந்து குடும்பம் உள்ளது என்பதால் தண்டனையை குறைக்க வேண்டுமென்பதை ஏற்க இயலாது. தண்டனை குற்றத்தின் தன்மையை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்.

குற்றவாளிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், கடுமையான குற்றமாகவே கருத வேண்டும்.

பொதுமக்கள் பணத்தில் அரசு ஊதியம் பெற்றவர்கள், பொருளாதார அழுத்தத்தையோ, மன அழுத்தத்தையோ காரணமாக கூற இயலாது.

காவல் நிலையத்தில் வைத்து இருவரும் காவல் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் நிராயுதபானியாக இருந்தபோதும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர்.

இருவரும் வியாபாரிகள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றே தெரிகிறது.

வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது.

இதுபோன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், இப்படி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top