
வழக்காடு மன்றங்களின் வழமை மாறா மரபுகளில் இதுவும் ஒன்று.
இத்தனைக்கும் “பேனாவை உடைத்தல்” என்பது எந்த சட்டப்புத்தகத்திலும் இபிகோவிலும் சொல்லப்படவில்லை. அதுவொரு பாரம்பரிய பழக்கம் அவ்வளவே.
ஆனால் மரண தண்டனை கொடுத்த பிறகு ஏன் நீதிபதி பேனாவை உடைக்கிறார்?
- இனி இதுபோல் மரண தண்டனை தீர்ப்பு எழுதவே கூடாது என்பதற்கான அடையாளம்.
- தண்டனை கொடுப்பது மனிதனாகிய நானல்ல, சட்டம். அந்த சட்டத்தின்பால் நான் எழுதும் தீர்ப்புக்கும் சம்பந்தமில்லை. என்னையும் தீர்ப்புத் தாளையும் இணைக்கும் இந்த பேனாவை உடைக்கிறேன்.
- ஒரு தனி மனிதனின் உயிரைப் பறிக்கும் தீர்ப்பை எழுதிய இந்தப் பேனா, இனி வேறு எந்தத் தீர்ப்பையும் எழுதப் பயன்படுத்தப்படக் கூடாது.
- “இரத்தக்கறை” படிந்த பாவப்பேனா இது. இனி இது நல்ல தீர்ப்பை வழங்காது.
- இந்த தீர்ப்பு, ஒருவேளை கருணை மனுவினால் மாற்றப்படலாம். அப்போது இந்தப்பேனா மாற்றக்கூடிய தீர்ப்பை எழுதியதாக ஆகிடும். தீர்ப்பு மாறினால், நீதி மாறுகிறது. அதற்குமுன் அந்தப்பேனாவே தற்கொலை செய்து கொள்கிறது.
ஒரு பேனாவுக்கே இப்படி யோசிக்கும் இந்திய இறையாண்மை சட்டம்+பாரம்பர்யம் வியப்பானதுதான். இதுபோல் தீர்ப்புகள் கொடுக்கப்படக் கூடாதுதான்.
ஆனால்,
அப்பாவி மனிதனைக் கொலை செய்யும் தவறுக்கும், பெண்களையும் பச்சிளம் குழந்தைகளையும் சூறையாடும் மிருகங்களுக்கும் மரண தண்டனை எனும் கொலை இல்லாவிடில் வேறென்ன தண்டனை கொடுக்க…?
என்ற சந்தேகக்கேள்வி தீராதவரை,
இது போல் பேனாக்கள் உடைக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கும்.
அதனால் சில குடும்பங்களும் மனங்களும் உடைந்தாலும்.
Writer Charithraa’s