திருக்கழுக்குன்றம் : சீட்டா சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபுவிடம் போனை பிடுங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் ஹமீதா பானு, போலீஸ் எஸ்.ஐ.கார்த்திகேயன் மிரட்டல்..!! Akkappore.news

முதல்வர் மு.க ஸ்டாலின் சிறப்பு செயலாளர் அமுதா ஐஏஎஸ், வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க், ஆணையர் கிரண் குராலா – நடவடிக்கை பாயுமா..?

ஆசிரியர் முகம்மது ஹாரூன்

.

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயனை கையில் வைத்துக்கொண்டு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஹமீதா பானு அடித்த ஆட்டமும் கொட்டமும் தான் தற்போது அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பேசு பொருளாக அதிரச் செய்து வருகிறது.

தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு கடந்த 2025 டிசம்பர் 17ம் தேதி
சீட்டா நிறுவனர், சேர்மன் ப பாபு @ லஞ்ச ஒழிப்பு ப பாபு அனுப்பியுள்ள பரபரப்பு புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற திருக்கழுக்குன்றம் மோட்டார் வாகன ஆய்வாளர் மீதும் , கைபேசியில் இருந்த அனைத்து ஆவணங்களையும் டெலிட் செய்த திருக்கழுக்குன்றம் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மீதும் வழக்குப்பதிவு செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அரசு பணியாளர்களின் ஊழலையும் நிர்வாக சீர்கேட்டையும் வெளிக்கொண்டு வந்து தமிழக அரசின் அவமானத்தை போக்கி அரசு பணியாளர்களை சீர்டுத்தும் உண்ணத பணியை நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் வருங்கால தலைமுறையினருக்காகவும் யாருடைய உதவியும் இல்லாமல் ஊழலை முழுமையாக ஒழிக்க எனது சொந்த உழைப்பில் இருந்து செய்து வருகிறேன்.

சீட்டாவின் நிறுவனரும் சீட்டாவின் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மேனும்மான ப பாபு @ லஞ்ச ஒழிப்பு ப பாபு என்கிற நான் பொது வழியில் விதிமீறி நடத்திய இருசக்கர ஒட்டுனர் உரிமத்துக்கான தேர்வு நடைபெறும் இடத்தின் அருகில் சாலையில் கூடிய அப்பாவி மக்களுக்கும் மைதானத்தில் நடத்தாமல் பொது சாலையில் நடத்துவதால் உரிமம் எடுக்கவும், புதுப்பிக்கவும் வருவோருக்கும் விபத்து நடந்து விடக்கூடாது என. 2025 டிசம்பர் 17 ம் தேதி காலை 10.35 மணி அளவில் புகைப்படம் எடுத்து அரசின் கவனத்துக்கும், அதிகாரிகள் கொண்டு செல்ல முயன்றேன்

அவ்வாறு சமூக நோக்கத்துடன் கைபேசியில் படம் எடுத்ததை குற்றம் என்று திருக்கழுக்குன்றம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஹமீதா பானு திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்துக்கு காலை 11 மணியளவில் குண்டர்களை வைத்து என்னை வலுக்கட்டாயமாக அழை(இழு)த்து சென்றார்.

காவல் நிலைய காமிராவில் இந்த சம்பவங்கள் பதிவாகாமல் இருக்க காவல்நிலையத்தின் வாசலுக்கு சற்று தள்ளி நிறுத்தி என் மொபைல் போனை வலுக்கட்டாயமாக பிடுங்கி எனது மொபைலில் இருந்த அனைத்து முக்கிய ஆவணங்களை இருவரும். அழித்தனர்.

அழிக்கப்பட்ட அந்த ஆவணங்கள் பல்வேறு காவல்துறை,,வட்டார போக்குவரத்து துறை , வருவாய் துறை, பதிவுத்துறை, கனிம வளத்துறை, மற்றும் அரசு துறை அதிகாரிகள் லஞ்சம் , ஊழல், முறைகேடு சம்பந்தப்பட்டது. அதனால் இந்த லஞ்ச அதிகாரிகள் தூண்டுதல் பேரில் போக்குவரத்து ஆய்வாளரும் காவல் உதவி உதவியாளரும் செயல்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறேன். இந்த புகாரை விசாரித்து உண்மையை அறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

பொது பாதையில் லைசெஸ் உரிமம் தேர்வு நடத்தக்கூடாது என்பதை தெரிந்தும் செய்த தவறை திருத்துவதற்க்கு பதிலாக காவல் நிலையத்துக்கு சம்பவ இடத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் அழைத்து சென்றது எப்படி? ஏன்… எதற்கு…? எந்த சட்டப்படி?

மேலும், திருக்கழுக்குன்ம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு எப்படி எந்த புகாரும் இல்லாமல் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப. பாபுவான என் கைபேசியில் உள்ள பல அரசு துறை அதிகாரிகளின் ஊழல் எதிர்ப்பு சார்ந்த அனைத்து ஆவணங்களையும் அழித்து அடாவடி செய்தது. எப்படி? எதற்காக? ஏன்?

மேற்படி, திருக்கழுக்குன்றம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஹமீதா பானு மீதும் திருக்கழுக்குன்றம் காவல் உதவி ஆய்வாளர் காத்திகேயன் மீதும் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் சமூக ஆர்வலர் லஞ்ச ஒழிப்பு ப.பாபு மனுவில் தெ ரிவித்துள்ளார்.

அதேசமயத்தில் இந்த அதிகாரிகள் அட்டகாசம் குறித்து அப்போதைய எஸ்பி சாய் பிரனீத், தற்போதைய மகாபலிபுரம் காவல்துறை டிஎஸ்பி, வட்டார போக்குரத்து அலுவலர் இளங்கோ ஆகியோருக்கும் உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோவிடம் ஆய்வாளர் ஹமீதா பானு மீது நடவடிக்கை என்ன? என பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, இந்த விசயம் என் கவனத்திற்கு வரவில்லை. விசாரிக்கிறேன் என ரத்தினச்சுருக்கமாக முடித்து கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு செயலாளர் அமுதா ஐஏஎஸ், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் கிரண் குராலா, நேர்மைக்கும் அதிரடிக்கும் பெயர் போன வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி அஸ்ரா கார்க் தற்போதைய மாவட்ட எஸ்பி சிபின் ஆகியோர் சாட்டையை சுழற்றுவார்களா?

திருக்கழுக்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் ஹமிதா பானு, திருக்கழுக்குன்றம் எஸ்.ஐ கார்த்திகேயன் ஆகியோர் மீது துறை ரீதியில் நடவடிக்கை பாயுமா?

எது எப்படியோ, திருக்கழுக்குன்றம் சாலையில் விதிமீறி லைசென்ஸ் உரிமம் சோதனை நடத்தியதை புகைப்படம் எடுத்த சமூக ஆர்வலர் லஞ்ச ஒழிப்பு ப.பாபுவிடம் போனை பிடுங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் ஹமீதா பானு, போலீஸ் எஸ்.ஐ.கார்த்திகேயன் மிரட்டல்-அட்டகாசம் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹமீதா பானு லஞ்ச வேட்டைக்கு எஸ்.ஐ கார்த்திகேயன் நிழலாக இருந்து கூட்டு சேர்ந்து துணை புரிகிறாரா எனவும் ஐயத்தை பொது மக்கள் சமூக ஆர்வலர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்பி, ஆணையர் கிரண் குராலா, ஆர்.டி.ஓ இளங்கோ துறை ரீதியில் நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய உயர் அதிகாரிகள் அழுத்தம் இதற்கு பிறகாவது வருமா….??

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்மையாக அரசு இயந்திரத்தை இயக்க 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கி ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என முன்னாள் முதல்வர் கலைஞரிடமே நற்பெயரும் பாராட்டும் பெற்று திறம்பட பணியாற்றும் அமுதா ஐ.ஏ.எஸ் ஊழல் கறைகளை களை எடுப்பாரா..?

பொறுத்திருந்து பார்ப்போம்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed