தென்காசியில் முத்தமிழ்த் தாரகை சுகந்தீனா கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிப்பு…!! அக்கப்போர் நாளிதழ் Akkappore.com சொடுக்குங்க
கூட்டமைப்பு
தென்காசியில் முத்தமிழ்த் தாரகை சுகந்தீனா கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தென்காசி யு.எஸ்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்ச் சங்கமம் விருதுகள் 2026 சார்பில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கும் விழா தென்காசி யு.எஸ்.பி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத் தில் வைத்து நடைபெற்றது.
தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையில்
நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் சி.நெல்லை நாயகம், யு.ஸ்.பி.கல்விக்குழும தலைவர் யு.செல்வராஜ், கன்னியாகுமரி சுரபி கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை இயக்குனர் எஸ். செல்வராஜ். ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பனைமரங்கள்பாதுகாப்பு கூட்டமைப்பு மாநிலத் தலைவர் எம்.ஏ. தாமோதரன் அனைவரையும்
வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் எஸ். தங்கலெட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு தலைமை விருந்தினராக உலகத்தாரகைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனரும், 214அதிகாரங்கள், 2140 குறள் வெண்பா படைத்து வள்ளுவரின் மிச்சமாக வாழும் முத்தமிழ்த்தாரகை சுகந்தீனா கலந்து கொண்டு விழாப்பேருரையாற்றி சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
தமிழ்ச் செம்மல் செம்மல், நற்றமிழ் பாவலர்,சிறந்த தமிழ் ஆளுமை, சிறந்த கவிஞர், சிறந்த எழுத்தாளர், சிறந்த படைப்பாளிகள், சேவா ரத்னா, சேவைச்செம்மல், சிறந்த சமூக சேவகர், சிறந்த பெண் ஆளுமை, நட்சத்திர ஆசிரியர், மகளிர் மேம்பாட்டின் தங்கமகள், மகளிர் மேம்பாட்டின் சுடரொளி, சிங்கப்பெண், பசுமைநாயகன், இயற்கையின் நாயகன் என 300 க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மகளிர் மேம்பாட்டில் சிறந்து விளங்கிய தூத்துக்குடியை சேர்ந்த எஸ்.தனலெட்சுமிக்கு மகளிர் மேம்பாட்டின் தங்கமகள் விருதும், பி.திலகத்திற்கு முத்துநகர் சிங்கப்பெண் விருதும், அபர்ணாவுக்கு வங்கக்கடல் ஆளிமகள் விருதும், ஒட்டப்பிடாரம் முத்துமாரிக்கு மகளிர் மேம்பாட்டின் சுடரொளி விருதும், வனிதாவுக்கு சிங்கப்பெண் விருதும், காசிங்ராஜாவுக்கு இயற்கை நாயகன் விருதும், புஸ்பாவுக்கு மகளிர் திலகம் விருதும், கன்னியாகுமரி பொன். ஜெயா இளங்கொடிக்கு ஆன்மீக சேவாரத்தினம்விருதும், முனைவர். ஷிரியா நாயருக்கு சேவாரத்னா ஆகிய விருதுகளையும் முத்தமிழ்த்தாரகை சுகந்தீனா வழங்கி கெளரவித்தார். யு.எஸ்.பி.கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் எஸ். சாந்தி, ஆங்கிலத்துறை தலைவர் பி. சிவசங்கரி ஆகியோர் நிகழ்ச் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். வணிகவியல் துறைத் தலைவர் எம். மகேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் சங்கமம் விருதுகள் 2026 நிர்வாகிகளும்,
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளும் செய்து இருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் விருது பெற்ற விருதாளர்கள் அனைவரும், விருது வழங்கி கௌரவித்த முத்தமிழ்த்தாரகை சுகந்தீனாவுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
