தொடர் போராட்டம் நடத்துவோம்…!! ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் மாநில தலைவர் ஜே.வாலன்றின் பிரிட்டோ அதிரடி அறிவிப்பு…!!
நா.மணிவண்ணன்
செய்தி ஆசிரியர், அக்கப்போர் நாளிதழ் Akkappore.news சொடுக்குங்க

29-01-2026

ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் மாநிலம் மற்றும் மாவட்ட திட்ட அலுவலகம் வட்டார வள மையம் அலுவலகங்களில்
SMC/BRC Accountant, Data Entry Operators, MIS Coordinators, Programmers, Accounts Managers (AAM), Office Assistant என பல்வேறு நிலைகளில் கல்லூரி பட்ட படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகம் பதிவு மூப்பு மூலமாக,
இனச்சுழற்சி மற்றும் எழுத்து தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணி ஆணை பெற்று 100 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள், பெண்கள் மற்றும் விதவைகள் உட்பட 1300 பேர் என்ற குறைந்த எண்ணிக்கையில் முழுநேர அலுவலக பணியாளர்களாக எவ்வித தொய்வின்றி தொடர்ந்து 10 முதல் 25 ஆண்களுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணி செய்தும் தொகுப்பூதிய பணி நியமனத்தின் போது குறைந்த ஊதியத்தில் நியமிக்கப்பட்டு சில ஆண்டுக்கு பின் ரூ.13, 720 முதல் ரூ.18,630 என்று குறைந்த ஊதியம் தான் பெற்று வருகிறோம்.

தமிழகத்தில் பிற துறைகளில் உள்ள பணியாளர்களை தொடர்ந்து அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பணிநிரந்தரம் ,
அறிவிப்புகளை செய்து வருகிறது.

பல முறை அமைதியான முறையில் காவல்துறை அனுமதியுடன் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

இந்த போராட்டம் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் போராட்டம் இல்லை,நீண்ட காலமாக போராடிவருகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்களது வாழ்வாதாரம் பாதுகாக்க பணிநிரந்தரம் கோரிக்கையை பலமுறை பல வழிகளில் போராட்டம் நடத்தி தெரியப்படுத்தியும் அரசு செவி சாய்க்கவில்லை,

தேர்தல் வாக்குறுதி படி எங்களது நீண்ட கால கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்திட வேண்டி அரசுக்கு கோரிக்கை வைத்திட 29-01-2026 முதல் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடத்திவருகிறோம்என்றார்.

நேற்றைய இந்த போராட்டத்தின் போது மாலையில் காவல்துறையினர் வாகனத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துச்சென்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மீண்டும் மாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இடையே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஓருங்கிணைந்தப்பள்ளிக்கல்விதொகுப்பூதிய பணியாளர்கள் பல்வேறு அடிப்படை பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறைந்த ஊதியம், நிரந்தரப்படுத்தப்படாத பணிநிலை, சமூக பாதுகாப்பு இல்லாமை, ஊதிய முரண்பாடு, ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டம் இதர நலத்திட்டங்கள் வழங்கப்படாமை போன்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து நிலவி வருகின்றன.

இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும், இதுவரை உரிய தீர்வு கிடைக்காத காரணத்தால், மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தொகுப்பூதிய ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, தொடர் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளும், ஊழியர்களும் இந்த போராட்டத்தில் மீண்டும் பள்ளிக்கல்வி துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நா.மணிவண்ணன்
செய்தி ஆசிரியர், அக்கப்போர் நாளிதழ் Akkappore.news சொடுக்குங்க

மற்றும்

புதியநாளிதழ்
கல்விடுடே அக்னிப்புரட்சி Akkapore.news
SpotlightTamilnadu©️®️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)