பேராசிரியர்.மரு.கே.முத்துக்கிருஷ்ணன்,BNYS,M.D.
யோகா மற்றும் இயற்கை மருத்துவர்,யோகா மற்றும் இயற்கை மருத்துவ நலவாழ்வியல் மையம்,நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை.
நாகூர்.
நாகப்பட்டினம் மாவட்டம்
நாகூர் அரசு மருத்துவமனையில் நடைப்பெற்ற உலக ஆரோக்கிய தினம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் ….
பேராசிரியர்.மரு.கே.முத்துக்கிருஷ்ணன்,BNYS,M.D.
யோகா மற்றும் இயற்கை மருத்துவர்,யோகா மற்றும் இயற்கை மருத்துவ நலவாழ்வியல் மையம்,நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை.
நாகூர்.
நாகப்பட்டினம் மாவட்டம்
ஏப்,7 -2026 உணவே மருந்து நம்முடைய உணர்வுகளை நாம் உண்ணும் உணவே ஆட்கொள்கிறது.
இயற்கை உணவு நமக்குள் இறைஉணர்வை அதிகப்படுத்தும் என்ற வரிகளோடு
நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில்
உடல் மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

அக்குபிரஷர் மருத்துவ முறையில் முதல் உதவி அக்கு குபிரஷர் புள்ளிகள் கற்றுத்தரப்பட்டது
*புறாநோயாளர் பிரிவுக்கு வரும் சக்கரைவியாதி உயர் ரத்தஅழுத்தம் உடல் பருமன் மருத்துவ பயனாளர்களுக்கு யோகா இயற்கை மருத்துவம் பற்றிய விழ்ப்புணர்வு அளிக்கப்பட்டது
யோகா இயற்கைமருத்துவ உணவுமுறை ஆலோசனை வழங்கப்பட்டது.


தற்போதைய கணிப்பின்படி, உலகளவில் ஒரு சராசரி மனிதனின் ஆயுள் எதிர்பார்ப்பு (Life Expectancy), 70 – 74 வருடங்களாகும். ஆனால், இந்த சராசரி மனிதன் தன் வாழ்நாளின் 50 சதவிகிதத்தை நோய்களோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அதிலும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன், நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய்கள், குடல் அழற்சி, அலர்ஜி, கண் நோய், குழந்தையின்மை, மனநோய்… இவை எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து உறுப்புகளையும் தாக்கும் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான வாழ்க்கைமுறை நோய்களோடு போராடிக் கொண்டிருக்கிறான் மனிதன். இவற்றை எல்லாம் வெல்ல முயலும் அவனது போராட்டத்தில் தோல்வியே மிஞ்சுகிறது.இந்த வாழ்க்கைமுறை நோய்களுக்கெல்லாம் காரணம், நமது உடலின் ‘உயிரியல் கடிகார’மும் (Biological Clock) ‘சர்காடியன் இசைவு’ம் (Circadian Rhythm) பாதிக்கப்படுவதுதான் என்கிறது சமீபத்திய ஆய்வு. 2017-ம் ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ் மற்றும் மைக்கேல் யங் ஆகியோரின் ஆராய்ச்சியும் நமது உடலின் ஒவ்வொரு செல்களிலும் இயங்கும் உயிரியல் கடிகாரம் மற்றும் அதன் சர்காடியன் இசைவைப் பற்றியதுதான்.உறுப்பு கடிகாரக் கோட்பாடு (Organ Clock Theory) என்பது பாரம்பரிய சீன மருத்துவத்தில், 24 மணிநேரத்தில் உடலின் குறிப்பிட்ட உறுப்புகள் அதிக ஆற்றலுடன் (2 மணிநேர இடைவெளியில்) செயல்படும் நேரத்தைக் குறிக்கும் ஒரு அமைப்பாகும். இந்த நேரத்தில் அந்த உறுப்பு தொடர்பான பணிகளைச் செய்வது உடல் நலனை மேம்படுத்தும்.
24 மணிநேர உறுப்பு கடிகார அட்டவணை (நேரத்தின் அடிப்படையில்):
அதிகாலை 3 – 5 (நுரையீரல்): ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மற்றும் நுரையீரலைச் சுத்தப்படுத்தும் நேரம்.
அதிகாலை 5 – 7 (பெரிய குடல்): மலம் கழித்தல் மற்றும் கழிவுகளை வெளியேற்றுதல்.
காலை 7 – 9 (இரைப்பை): காலை உணவு உண்ண வேண்டிய மிக முக்கியமான நேரம்.
காலை 9 – 11 (மண்ணீரல்): ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி ஆற்றலாக மாற்றும் நேரம்.
முற்பகல் 11 – மதியம் 1 (இதயம்): இரத்த ஓட்டம் சீராக இருக்கும், மதிய உணவுக்கான நேரம்.
மதியம் 1 – 3 (சிறுகுடல்): உணவை ஜீரணித்து பிரித்தெடுக்கும் நேரம்.
மதியம் 3 – 5 (சிறுநீர்ப்பை): உடல் கழிவுகளை வெளியேற்றும் நேரம்.
மாலை 5 – 7 (சிறுநீரகம்): இரத்தத்தை சுத்திகரிக்கும் நேரம்.
இரவு 7 – 9 (பெரிகார்டியம் – இதயம் சுற்றியுள்ள பகுதி): மன அமைதி மற்றும் உறவுமுறைக்கான நேரம்.
இரவு 9 – 11 (மூவெப்பமண்டலம்/Triple Warmer): ஒட்டுமொத்த உடல் வெப்பம் மற்றும் ஆற்றல் சீரமைப்பு.
நள்ளிரவு 11 – 1 (பித்தப்பை): பித்தப்பை செயல்பாடு, உடல் தன்னைத்தானே பழுதுபார்க்கும் நேரம்.
நள்ளிரவு 1 – 3 (கல்லீரல்): கல்லீரல் கழிவுகளை நச்சு நீக்கம் செய்யும் நேரம், ஆழ்ந்த உறக்கம் அவசியம்.
இந்த நேரத்தில் தூங்குவது, சாப்பிடுவது, வேலை செய்வது எனப் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான உடல்நிலை மற்றும் நோயற்ற வாழ்வை பெற முடியும் என்ற விழிப்புணர்வு நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் செயல்படும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நலவாழ்வு மையத் தில் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
உடல் உறுப்பு கடிகாரத்தை பின்பற்றி வாழ்ந்தால் உடல் உறுப்புகளை நீக்கவேண்டிய நிலை வராமல் ஆரோக்கியமாக வாழலாம்.
பேராசிரியர்.மரு.கே.முத்துக்கிருஷ்ணன்,BNYS,M.D.
யோகா மற்றும் இயற்கை மருத்துவர்,யோகா மற்றும் இயற்கை மருத்துவ நலவாழ்வியல் மையம்,நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை.
நாகூர்.
நாகப்பட்டினம் மாவட்டம்.
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now