மதுரையில் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில், பிரம்மாண்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…!! N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.news
/ Just CliCK now

மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், விரகனூர் ரவுண்டானா அருகில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார்
தலைமை வகித்தார்.

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து
கொண்டு, முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்
களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்: தகவல் தொழில்நுட்பம் (IT), உற்பத்தித் துறை, வங்கி மற்றும் நிதித்துறை, விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்த இளைஞர்களுக்காக ஆயிரக்கணக்கா

வேலைவாய்ப்புகள் இந்த முகாமில் காத்திருக்கின்றன.
மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச்
சேர்ந்த வேலைதேடும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என,
மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் கூறுகையில்:
படித்த இளைஞர்கள் தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற சரியான வேலையைத் தேர்ந்தெடுக்க இந்த முகாம் ஒரு பாலமாக அமைகிறது. ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான நிறுவனங்களைச் சந்திக்கும் இந்த வாய்ப்பு அரிதானது.

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்குத் தேவையான நேர்காணல் திறன்கள் மற்றும் தகவல் தொடர்புத் திறன்களை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், ஒவ்வொரு நேர்காணலையும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.com
/ Just CliCK now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed