
மனிதம் காப்போம் – நேரத்தை கொடுத்து ஏழைகளுக்கு உதவுவோம்…!! சீட்டா நிறுவனர், சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு…!! அக்கப்போர் நாளிதழ் Akkappore.news / சொடுக்குங்க
சீட்டாவின் மனிதம் காப்போம் – அமைப்பு மூலமாக கடந்த 39 மாதமாக மனிதம் காப்போம் என்ற சிந்தனையில் நலிவுற்ற, தனிமைப்படுத்தப்பட்ட, நோய் பாதித்து உள்ள, ஆதரவற்ற முதுமை அடைந்து உள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக பேசி அவர்களுக்கு அன்பை பகிர்ந்து வருகின்றோம்.
இவ்வாறு தமிழகத்தில் 713 நபர்களுக்கு ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் நேரத்தை மட்டும் செலவிட்டு வருகின்றோம்.
இன்று எமது சீட்டாவின் மனிதம் காப்போம் அமைப்பு துவங்கி 40-வது மாதம்.
நீங்களும் சீட்டாவுடன் இணைந்து ஏழைகளுடன், ஆதரவற்றவர்களுடன்,நோயாளிகளுடன், முதியோர்களுடன் செலவு செய்யும் நேரத்தை உங்கள் வயது முதிர்வு நேரத்தில் இரண்டு மடங்காக பணத்துக்கு பதிலாக நேரத்தை சேமித்து உங்களுக்கு ஆதரவு கொடுக்க உள்ளோம்.
வாருங்கள் மனிதம் காப்போம்
மனிதனாக வாழ்வோம்.
மனிதனை மதிப்போம் அப்போது நாமும் மதிக்கப்படுவோம்…!!
லஞ்ச ஒழிப்பு ப.பாபு, சீட்டா நிறுவனர், சேர்மன்.
மேலும் தொடர்புக்கு
வாட்சப் எண்
+91 8939095066.
