
🙏🏻வழுக்கும் கல்லை தவிர்த்து!
🙏🏻வழுக்கி விழுவது தவிர்ப்பீரே!
🙏🏻24-02-26, செவ்வாய்க் கிழமை!
1.பாத்ரூமிலே வழுக்கி விழுந்து!
பலருமே கிடையிலே கிடந்து!
பாரம் ஆன வாழ்வினாலே!
பலரது வாழ்வு முடிகிறதே!
2.இது சின்னச் செய்தியே!
இதில் கவனமும் இன்றியே!
இழந்த உயிர்கள் எத்தனையே!
இன்னும் தொடருது இழப்புக்களே!
3.வயது ஆகும் பெரியோர்களே!
வழுக்கி விழுகிறார் அதிகமாக!
வயதும் முதிர்வு ஆவதாலே!
வாழ்ந்த பலம் போகிறதே!
4.மனதில் இருக்கின்ற பலமே!
முதிர்வயது உடலில் இருக்காதே!
மக்களுக்கு பாரமாக வாழாமலே!
மிகவும் கவனமாகவே வாழணுமே!
5.மருத்துவ மனை சிகிச்சையிலே!
மருந்து மாத்திரை விழுங்கியே!
மற்ற சர்க்கரை நோயினாலே!
மக்கள் வாழ்வும் அழிகிறதே!
6.சர்க்கரை நோய் வந்தாலே!
சரியாகி வாழ்பவர் கிடையாதே!
சாகும் வரைக்கும் மாத்திரையே!
சார்ந்து வாழுகின்ற நிலைமையே!
7.அறுவை சிகிச்சைகள் செய்தே!
அதற்கும் முடிவும் இல்லாமலே!
அடுத்தும் அறுக்கிற நிலையே!
அழுந்தியே வாழுதே மக்களே!
8.வாழ்பவர் அனுபவம் பார்த்து!
வருமுன் காத்திடவும் வேண்டியே!
வழுக்கி விழுவதையும் தவிர்த்தே!
வாழ்ந்திட வேண்டுமே மக்களுமே!
9.வயது முதிர்ந்த பெரியோர்களே!
வழுக்கி விழுந்து கிடப்பவர்களே!
வாழும் உறவுகளின் வீட்டிலே!
வந்து பார்க்கையில் பதறுதே!
10.பாச உறவு மக்களுக்கு!
பாரம் ஆகாமல் வாழ்ந்திடவே!
பார்த்து பேணணும் நம்மையே!
பலரும் கூறுகின்றது உண்மையே!
11.வழுக்கி விழாமலே தவிர்ப்பீரே!
வாயின் ருசியையும் அடக்குவீரே!
வயதிற்கு தக்க பொறுமையாக!
வாழப் பழகியும் கொள்வீரே!
12.பாரம் இன்றி போகவே!
பலர் நினைப்பது உண்மையே!
போய்ச் சேருகின்ற நிலைமையே!
பொதுவாக எவரிடமும் இல்லையே!
🙏🏻மிகவும் சின்னச் செய்தியே!
🙏🏻மக்களும் கவனம் இன்றியே!
🙏🏻மாபெரும் இழப்பு தொடருதே!
🙏🏻மீட்டிட வேண்டியே எழுதுவதே!
