20 ஆண்டுகளாகத் தேடி வந்த தன் உண்மையான அம்மா, 2 ஆண்டுகளாக தன்னுடன் ஒரே அலுவலகத்தில் பணி செய்திருக்கிறார் என்று தெரிந்தால் அந்த மகனுக்கு எப்படி இருக்கும்? அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஒரு திரைப்படக் கதையைப் போலத் தோன்றினாலும், இது அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் நடந்த 100% உண்மையான சம்பவம். இந்த அதிசயமான கதையை முழுவதும் படித்தால், உங்கள் கண்களிலும் கண்ணீர் வரும்!
ஹாலி ஷியரர் (Holly Shearer) என்ற இளம் பெண் 15 வயதில் கர்ப்பமானார். அந்த நேரத்தில் குழந்தையை வளர்க்கத் தேவையான சூழல் அல்லது வாழ்வாதாரம் இல்லாததால், தனது மகனுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, 2001ஆம் ஆண்டு அந்தக் குழந்தையை வேறு ஒரு குடும்பத்திடம் வளர்க்கக் கொடுததார். அந்தக் குடும்பம் அவருக்கு பெஞ்சமின் ஹுல்லெபெர்க் (Benjamin Hulleberg) என்று பெயர் வைத்தது.
பெஞ்சமின் வளர வளர, தான் ஒரு தத்தெடுத்த குழந்தை என்பதை அறிந்தார். பலர் இப்படிப் பட்ட சூழலில் அம்மாவை வெறுப்பார்கள். ஆனால், பெஞ்சமின் ஒரே ஒரு ஆசை மட்டும் வைத்திருந்தார்:
“நான் என் அம்மாவைக் கண்டுபிடித்து, இந்த நல்ல வாழ்க்கையை கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டும்!”
அதற்காக அவர் பல ஆண்டுகள் DNA பரிசோதனைகள் செய்து, பல அமைப்புகளுக்கு எழுதினார். ஆனால், அவரால் அம்மாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நேரத்தில் ஹாலி இணையத்தில் தனது மகனின் பெயரைத் தேடி, அவரது Facebook கணக்கைக் கண்டுபிடித்தார். மகன் 18 வயதானபோது அவர் அவனைப் பார்த்தார். ஆனால், திடீரென தொடர்பு கொண்டால் அவன் வாழ்க்கை குழப்பமாகிவிடும் என்ற பயத்தில், 2 ஆண்டுகள் அமைதியாக அவன் புகைப்படங்களை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்.
மகனின் 20வது பிறந்தநாளான (2021 நவம்பர் 20) அன்று, ஹாலி மேலும் காத்திருக்க முடியாமல், அவருக்கு ஒரு செய்தி அனுப்பினார்:
“பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 20 ஆண்டுகளுக்கு முன் உன்னை இந்த உலகிற்கு கொண்டு வந்தது நான்தான்…”
அந்த செய்தியைப் பார்த்த பெஞ்சமின் அ*திர்ச்சியடைந்து மகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க பதிலளித்தார். பின்னர் அவர்கள் இருவரும் இரவு உணவிற்கு சந்திக்க முடிவு செய்தனர்.
அவர்கள் சந்தித்து பேசும் போது தான் வயப்பான ஒரு விடயம் தெரிய வந்தது.
“நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டபோது, பெஞ்சமின் கூறினார்:
“நான் Utah மாநிலத்தில் உள்ள St. Mark’s Hospital இல் NICU பிரிவில் வேலை செய்கிறேன்.”
அதை கேட்ட ஹாலி அதிர்ச்சியடைந்தார்! ஏனெனில், அவரும் அதே மருத்துவமனையில் இதய நோய் பிரிவில் உதவியாளராக வேலை செய்தார்!
ஆம்… இந்த அம்மாவும் மகனும் கடந்த 2 ஆண்டுகளாக ஒரே மருத்துவமனையில் வேலை செய்துள்ளனர்! ஒரே parking இடத்தில் வண்டி நிறுத்தி, ஒரே canteen-ல் சாப்பிட்டு, ஒரே பாதையில் நடந்திருந்தாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் அறியவில்லை. இறுதியில் Facebook தான் அவர்களை மீண்டும் இணைத்தது.
விதி என்பது எவ்வளவு அதிசயமானது, இல்லையா?
ஒருநாள் சந்திக்க வேண்டியவர்கள் எப்படியாவது சந்திப்பார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.