
நாய்க்கடி புள்ளி விவரம் அதிர்ச்சி தகவல்கள்…!! பாதிப்பும் தீர்வும்…? விழிப்புணர்வு தொடர் பத்திரிக்கையாளர், P. பாண்டி செல்வி M.Com., M.B.A., உதவி ஆசிரியர், அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய்க்கடி கொடூரமாக உள்ளது.
தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இயலாத சூழல் உள்ளது.
மேலும் விலங்குகளின் பாதுகாவலனாக புளூ கிராஸ் அமைப்பு செயல்படுகிறது. பெரும்பான்மையாக நாய்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களைத் தாக்குகிறது.
நாய்க்கடிக்கு முக்கிய காரணம் அந்த நாய் நோய்வாய்பட்டிருக்கும்போது தனது பாதுகாப்பு கருதியும் நோயின் தாக்கத்தாலும் மனிதர்களைக் கடிக்கிறது.
தெருநாய்களில் நான்கு நாய்கள் இருக்கும் இடத்தில் இரண்டு நாய் நோய்வாய்ப்பட்டிருக்கும். மனிதர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்று நாய்களுக்கும் பாக்டீரியா தொற்று மற்றும் வைரஸ் தொற்றுகள் ஏற்படுகின்றன.
வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவ்வப்போது மருத்துவரிடம் காண்பிக்கிறோம்.
மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தடுப்பூசி செலுத்துகிறோம்.
வீதியில் இருக்கும் தெருநாய்களுக்கு அவ்வாறான மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதில்லை.
ஒரு பகுதியில் நாய்களின் அட்டகாசம் அதிகமாக இருக்கும் பொழுது நாம் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தால் முதலில் அவற்றை அப்புறப்படுத்தி பிறகு வேறு எங்கோ ஒரு பகுதியில் விட்டுவிட்டு அதே போன்று நம் பகுதியில் செய்கின்றனர்.
நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மக்களுக்கு நாய்க்கடி குறித்த போதுமான விழிப்புணர்வு அவசியம்.
கண்டு கொள்ளாமல் விடப்படும் நாய்க்கடி 100 சதவீதம் உயிரிழப்பை ஏற்படுத்தும்.

உலக அளவில் வருடத்திற்கு 59000 மனிதர்கள் நாய்க்கடியால் இறந்து போகிறார்கள். 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 37 லட்சம் மக்கள் நாய்க்கடிக்கு ஆளாகின்றனர். 54 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
ஆண்டுக்கு ஆண்டு 18000 முதல் 20000 வரை நாய்க்கடி அதிகரித்து வருகின்றது.
உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டும் 36% நாய்க்கடி பாதிப்பு உள்ளது.
56% நாய்க்கடி 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு நாளில் 10000 மக்கள் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் இரண்டு பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இறந்து போகின்றனர்.
சமூக வளைதளங்களிலும், நேரடியாகவும், மருத்துவ உதவி மையங்களும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு கொடுத்தாலும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே உள்ளது.
அரசு முன்வந்து இந்த பிரச்சினையைக் கையாழ்வது மிகவும் அவசியமானது.
அனைவருக்கும் நாய்க்கடி குறித்து அச்சம் இருந்தாலும் அவற்றை கையாழ்வது குறித்து சில யோசனைகள்
நாய் அதன் பாதுகாப்பு கருதி நம்மை துறத்தினால் அவ்விடத்திலிருந்து வேகமாக சென்றுவிட முடியும் என்ற சூழல் இருந்தால் மட்டும் முன்னேறிச் செல்ல வேண்டும்.
இல்லையேல் அதே இடத்தில் அமைதியாக நிற்பதும், அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைப்பதும் புத்திசாலித்தனமாகும்.
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நாய்கள் அதிகமாக இருக்கும் பகுதிக்கு தனியாக செல்லாமல் இருப்பது நல்லது.
நாய் கடித்தாலோ, அதன் எச்சில் பட்டாலோ, நகக் கீரல் விழுந்தாலோ, கடித்து காயம் ஏற்பட்டாலோ அலட்சியமாக இருக்கக் கூடாது.

உரிய முதலுதவியை செய்துவிட்டு நிச்சயம் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
நாய் கடித்து அதிகமாகக் காயம் ஏற்பட்டால் அவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
கண்டுகொள்ளாமல் விடப்படும் நாய்க்கடியினால் ரேபிஸ் நோய்த்தொற்று அதிகரித்து நாயைப் போன்று மனிதர்களின் நடவடிக்கைகள் மாறும்.
நாய்களின் எச்சில் மூலம் இந்த நோய் பரவுகிறது.
முக்கியமாக ரேபிஸ் நோய்த் தொற்று நாய் மட்டுமல்லாமல் பூணை மற்றும் குரங்குகள் ஆகியவை பாதிக்கப்பட்டிருந்தால் அதன் மூலமும் பரவுகின்றன.
முக்கியமாக ரேபிஸ் நோய்த் தொற்று நரம்பு மண்டலத்தை பாதித்து காய்ச்சல், சளி, தலைவலி, எச்சில் கூட விழுங்க இயலாத அளவிற்கு தொண்டை வலி, கூச்ச உணர்வு, பதட்டம், குழப்பம், தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் இருக்கும்.

நாய்க்கடிக்கான முக்கிய முதலுதவி மற்றும் சிகிச்சை:
காயத்தை சுத்தம் செய்தல்: கடிபட்ட இடத்தை ஓடும் குழாய் நீரில், சோப்பு அல்லது கிருமிநாசினி திரவம் கொண்டு 10-15 நிமிடங்கள் நன்றாகக் கழுவ வேண்டும்.
இரத்தப்போக்கை கட்டுப்படுத்துதல்: சுத்தமான துணியை வைத்து காயத்தை அழுத்திப் பிடித்து இரத்தப்போக்கை நிறுத்த வேண்டும்.
தடுப்பூசி (Rabies Vaccine): மருத்துவரின் ஆலோசனையுடன் உடனடியாக நாய் கடித்த நாளில் முதல் தடுப்பூசியும், பின்னர் 3, 7, 14, 28-வது நாட்களில் முறையே தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும்
மருத்துவமனை சிகிச்சை: காயம் ஆழமாக இருந்தால், உடனடியாகத் தையல் போடுவதைத் தவிர்த்து, ‘இம்யூனோகுளோபுலின்’ (Immunoglobulin) மருந்தை மருத்துவர் மூலம் செலுத்திக்கொள்ள வேண்டும்.
வீட்டு நாய் கடித்தால்: வீட்டில் வளர்க்கும் நாயாக இருந்தாலும், அதற்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், கடித்தவுடன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
P. PANDI SELVI M.Com., M.B.A
பத்திரிக்கையாளர், P. பாண்டி செல்வி M.Com., M.B.A., உதவி ஆசிரியர், அக்கப்போர் நாளிதழ்

i

?