ஆனந்த விகடன் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் பிறந்த நாள் விழா திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது….!!
திருத்துறைப்பூண்டி:திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்து மிகப் பெரிய திரைப்படங்களை தயாரித்து ஜெமினி திரைப்பட நிறுவனம் மற்றும் ஆனந்த விகடன் இதழை உருவாக்கிய திருத்துறைப்பூண்டி மண்ணின் மைந்தர்
எஸ்.எஸ்.வாசன் அவர்களின் 122 ஆவது பிறந்த நாள் விழா திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகே நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை திருத்துறைப்பூண்டி நகர மக்களும் அனைத்து செய்தி மற்றும் ஊடக சங்கத்தினர், திருவாரூர் மாவட்ட மண்ணின் மைந்தர்கள் வரலாற்று ஆய்வு மையம் ஆகியன இணைந்து நடத்தியது.
திருவாரூர் மாவட்ட மண்ணின் மைந்தர்கள்
ஆய்வு மையத்தின் வரலாற்று ஆய்வாளர் எடையூர் மணிமாறன் வரவேற்று பேசினார் . திருத்துறைப்பூண்டி முன்னாள் நகர் மன்றத் தலைவர் ஆர்.எஸ்.பாண்டியன் தலைமை தாங்கினார்.
தீக்கதிர் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஐ.வி.என் நாகராஜன்,
நகர நிலவள வங்கியின் முன்னாள் தலைவர் சண்முக சுந்தர், மூத்த பத்திரிக்கையாளர் நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எஸ் எஸ் வாசன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டஅனைத்து ஊடகப்பிரிவு செய்தியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நகர மன்றத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ்,
திருத்துறைப்பூண்டி தமிழ்ச் சங்க செயலாளர் ஆசைத்தம்பி,
திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார்,
டெல்டா ரோட்டரி சங்கத் தலைவர் மதன்,நூற்றாண்டு அரிமா சங்கத் தலைவர் மாதவன்,நகர்மன்ற உறுப்பினர்கள் எழிலரசன்,சக்திவேல்,கவிஞர் இளைய குமார்,தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொறுப்பாளர் சாமிநாதன், திருவாரூர் மாவட்ட
ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் நாகராஜன்,
திருத்துறைப்பூண்டி பத்திரிகையாளர் சங்கத்தலைவர் பிரபாகரன்,
முன்னாள் ஜே.சி.ஐ தலைவர் செந்தில் வெங்கட்ராமன் சமூக செயற்பாட்டளர்கள் சிங்கை சரவணசோழன்,
ஏ.கே..செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன் நன்றி கூறினார்.
