தமிழ்நாடு கவர்னர் ரவி, பழகுவதற்கு இனிய நண்பர் ! நல்ல பண்பாளர்! ஆழ்ந்த அறிவாற்றல் உள்ளவர்..!! பிரபல அரசியலாளர், சிந்தனையாளர், எழுத்தாளர் வழக்கறிஞர், ‘அக்கப்போர்’ நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அக்கப்போர் நாளிதழ் Akkappore.com சொடுக்குங்க

தமிழ்நாடு கவர்னர் ரவி அவர்கள் பழகுவதற்கு இனிய நண்பர் ! நல்ல பண்பாளர்! ஆழ்ந்த அறிவாற்றல் உள்ளவர்..!! பிரபல அரசியலாளர், சிந்தனையாளர், எழுத்தாளர் வழக்கறிஞர், ‘அக்கப்போர்’ நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அக்கப்போர் நாளிதழ்
Akkappore.com சொடுக்குங்க
🌹💐🌺

ஆளுநர் ரவி அவர்கள் மேற்கு வங்காளக் கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். இங்கு அவர் மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகளைச் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை கவர்னர் ரவி அவர்கள் பழகுவதற்கு இனிய நண்பர் ! நல்ல பண்பாளர்! ஆழ்ந்த அறிவாற்றல் உள்ளவர்!

தமிழ் இலக்கியங்கள் மீது தீவிர வாசிப்புடையவர். அவர் தமிழ் மொழியைச் சிறப்பாகச் சொல்லி பலமுறை நான் கேட்டிருக்கிறேன்.!

மனதில் பட்டதை நேரடியாகச் சொல்லக் கூடியவர்.

அரசியல் கலந்தாலோசிப்புகளில் என்னிடம் கூட அவர் சில விஷயங்களைக் கேட்டுக் கொள்வார். அப்படி ஒரு நல்ல ஆளுநர்!ஆனால் தமிழ்நாட்டில் அவர் மீது விமர்சனங்களையும் பல நேரங்களில் அவமானங்களையும் பல நேரம் அலட்சியங்களையும் சுமத்தினார்கள். ஆளுநர் மாளிகையை மூட வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள்.

மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் தாமதப்படுத்தினார் என்றால் அதன் காரணத்தையும் சரியாகத்தான் அவர் சொல்லுவார்!

அந்த வகையில் அது சார்ந்து இப்போது உச்ச நீதிமன்றங்களில் பல தீர்ப்புகள் வந்திருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் கெட் அவுட் கவர்னர் என்றெல்லாம் கோஷம் விட்டார்கள். பல நேரங்களில் அசிங்கப்படுத்தினார்கள்!

அதையெல்லாம் தாண்டி அவர் தன் செயல்பாடுகளில் உறுதியாக இருந்தார்!உண்மையில் அவரைப் பழகியவர்களுக்கு அவரது குணமும் பண்பும் தெரியும் என்பதால் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் அவரைப் பெருமை படுத்தித்தான் பேசுவார்கள். ஆனால் சில சுய அறிவு இல்லாத அரசியல்வாதிகள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்ற பெயரில் உலா வரும் பிற்போக்கு வாதிகள் ரவியை வேண்டுமென்று குறை சொல்லி கூவி திரிவார்கள்….

இப்போது மேற்கு வங்கத்திற்கு ஏன் அவரை மாற்றியுள்ளார்கள் என்றால்
அங்கே மாநில அரசை வைத்துக்கொண்டு சிலர் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேவையில்லாத வேலைகள் பலவற்றை செய்து கொண்டிருப்பதால் அவற்றின் மீது ஒரு நல்ல முடிவு எடுக்க இவரால் தான் முடியும் என்பதற்காக அங்கே அவரை கவர்னராக மத்திய அரசு நியமித்துள்ளது.

மேலும் மேற்கு வங்கத்தின் சில எல்லைப் பகுதிகளை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டிய நிலைமையும் வரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பல வகையிலும் கவர்னர் ரவி அவர்களின் தேவை அங்கே இருப்பதால் அவர் மாற்றப்பட்டுள்ளார்.

ஆரிப் முகமது கான் கேரளாவில் கவர்னராக இருந்தபோது கேரளாவின் முதல்வர் பினராய்க்கு அவரைப் பிடிக்காமல் போனது. ஆனால் அவர் ரவி போல திறமை உள்ளவராக இருப்பாரா என்கிற கேள்விக்கு அப்பால் பாஜகவின் தோழமைக் கட்சி ஆளுகின்ற நிதிஷ்குமாரின் பீகார் மாநிலத்திற்கு அவரை மாற்றினார்கள்.

மம்தாவின் ஏகபோக கெடுபிடிகளுக்குப் பதில் தர இவரால் முடியும் என்கிற அளவில்தான் இப்போது அவரை மேற்கு வங்கத்திற்கு மாற்றி உள்ளார்கள் என்று ஒரு தகவல்!

Expressed a wish to meet our humble & dynamic Governor Thiru RN Ravi Avl before he leaves to take charge at Bengal Lok Bhavan. His side kind enough to speak with me over phone & invited me to visit him in Kolkata.

Thiru Ravi has exposed the duplicity & deviousness of the DMK government over the years. He is a man of conscience who refused to cow down to DMK goons.

It is due to this that he is being sent to Bengal. The former Kerala Governor Thiru Arif Mohammad had softened after some years but Thiru Ravi has been steadfast & courageous in taking on unconstitutional forces.

CM Mamata Banerjee will find it tough to continue her extra-judicial activities now.

பிரபல அரசியலாளர், சிந்தனையாளர், எழுத்தாளர் வழக்கறிஞர், ‘அக்கப்போர்’ நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அக்கப்போர் நாளிதழ்*
Akkappore.com சொடுக்குங்க

🌹💐🌺

கேஎஸ்ஆர் போஸ்ட்

ksr post

7-3-2026.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top