விசாரணை நடத்தினார்களா?

அல்லது வேண்டுதல் பூஜை செய்தார்களா?

கரூர் விவகாரத்தில் ஏற்கனவே இரு முறை – அதுவும் முழு நாட்கள் -விஜய்யிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்ட போதே இந்த வியப்பு ஏற்பட்டது.

ஏதோ தீவிரவாத செயல் புரிந்தவர்களிடம் தான் இது போல தொடர் விசாரணைகளும், நீண்ட நேர விசாரணைகளும் நடக்கும்.

இது விஜய்யின் கவனக் குறைவால் நிகழ்ந்த விபத்தா?
இந்த நிகழ்வுக்கு காவல்துறையின் கவனக் குறைவு காரணமா?

இதில் ஆளும் கட்சிக்கு குறிப்பாக செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருக்கிறதா…? எனப் பல கேள்விகளுக்கு விடை இல்லை
.
இந்த கேள்விகளுக்கான விடைகளை சிபிஐ வெளிப்படுத்துமா?

உண்மைகள் வெளிவருமா?

யாரேனும் இதில் குற்றம் செய்திருந்தால் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு உத்திரவாதம் உண்டா?

சிபிஐ என்றாலே, அது மத்தியில்ஆளும் தரப்பின் அரசியல் நலன்களுக்கான அடியாள் என்ற புரிதல் தான் நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது.

ஏனென்றால், மடப்புரம் கோவில் காவலாளி இளைஞர் அஜித்குமார் விவகாரத்தில் பொய் குற்றம் சுமத்தி அவன் சாவுக்கு காரணமான நிகிதா என்பவர் குற்றச்சாட்டை வாபஸ் வாங்கியதாகச் சொல்லி வழக்கையே முடித்து வைத்தது தான் சிபிஐ விசாரணையின் லட்சணம்…!

சரி, விஜய் விவகாரத்திற்கு வருவோம்!

இவர்கள் விஜய்யை விசாரணைக்கு அழைக்கிறார்களா? அல்லது பிஜேபியோடு கூட்டணி சேர வேண்டுகோள் வைக்க அழைக்கிறார்களா?

அல்லது ஒரு பெரிய நட்சத்திரத்தோடு பேசிப் பழகி செல்பி எடுத்து பீற்றிக் கொள்ள அழைக்கிறார்களா? ( சென்ற முறை அவரோடு அனைத்து சிபிஐ அப்பிசர்ஸும் போட்டோ எடுத்துக் கொண்டு தாங்களும், தங்கள் பிள்ளைகளும் அவருக்கு ரசிகர்களே என்றார்களாம்)

இந்த முறை திரிஷா விவகாரம் பெரிதானதால், அது குறித்து அறிந்து கொள்ளும் அற்ப ஆசைக்கு அழைத்தார்களா…? அல்லது அதானியின் பணபலத்தை காட்டி தூண்டில் போட்டு தூக்கத் துடித்தார்களா..?

ஜனநாயகன் படத்தை தடுத்து நிறுத்தி பேரம் பேசி நடக்காததால், கரூர் உயிர்ப்பலிகள் விவகாரத்தில் கண் துடைப்பு விசாரணை நடத்தி, கட்டக் கடைசியிலாவது கூட்டணிக்குள் கொண்டு வர முயன்றும் கடுப்பானது தான் சிபிஐ கண்ட பலனாகும்!

பாஜகவின் மிரட்டல் அரசியலுக்கு பணிந்து போகாமல் உறுதி காட்டி வரும் இந்த வகையில் விஜய் பாராட்டத்தக்கவரே.

நன்றி: சாவித்திரி கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed