முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நன்றி !! – தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ், அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

25 – 03 – 2026

முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நன்றி !! தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் !

தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் !

🙏🏾

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை ஏற்று தேர்தல் அறிக்கையில் பத்திரிகையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தமைக்கு நன்றி !

குறிப்பாக, தாலுக்கா அளவில் பணியாற்றும், செய்தியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கும், அரசு அங்கீகார அட்டை மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி மகிழ்ச்சி !

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 10 வருடங்களாக நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று போராடி வந்தோம் !

அன்றைய செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ அவர்கள் அதற்கான பணிகளை செய்தார் !

ஆனால் பொருளாதார ரீதியாக கடைசி நேரத்தில் அது செயல்பட முடியாமல் போனதாக சொல்லப்பட்டது !

அது சமயம் தி.மு.க தேர்தல் அறிக்கையில் நலவாரியம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர் !

ஆகையால் அந்த தேர்தலில் தி.மு.க விற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ஆதரவு அளிக்க முடிவு செய்தது.

ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டில் உலகத்தில் எங்குமே நாம் யாரும் கேள்விப்படாத முதலாளிகளை முன்னிலைப்படுத்தி பெயரளவில் நலவாரியத்தை ஏற்படுத்தியது !

ஆகையால் மேலும் சில கோரிக்கைகளை நாங்கள் முன் வைக்கிறோம் !

🙏🏾

தமிழகத்தில் தற்போது உள்ள பத்திரிகாலர் நல வாரியத்தை மாற்றி அமைக்க வேண்டும் !

முதலாளிகளுக்கு பதிலாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அதில் இடம் பெற வேண்டும் !

தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கூட்டுறவு சொசைட்டி தொடங்க வேண்டும் !

மாநில நெடுஞ்சாலையில் டோல்கேட் போன்றவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் !

RNI பதிவு பெற்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்லும் பொழுது சிறப்பு சிகிச்சை வார்டு அரசு மருத்துவமனைகளில் ஒதுக்கீடு செய்ய ஆவணம் செய்ய வேண்டும் !

போன்ற கோரிக்கைகளை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் !

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் கட்சி எதுவோ அதற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் முழு ஆதரவு தரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் !

தோழமையுடன்
டி.எஸ்.ஆர். சுபாஷ் !
மாநில தலைவர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( TUJ )
9444111494 / 7401117799

🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

கி.அருண்குமார்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
சென்னை
செய்தி தொடர்பாளர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top