
தேனியின் வடுகப்பட்டியே..!! கவிப்பேரரசு வைரமுத்துவே…!! கால் நூற்றாண்டை கடந்து நம் மொழிக்காக “ஞான பீடம்” விருது கையில் ஏந்திய தமிழனே….!! என் அன்பு வாழ்த்துகள்…!! – தன்னம்பிக்கை பேச்சாளர், நடிகை, கவிஞர் ரேகா, அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

கவிப்பேரரசனே…!!
சொக்க தேவப்பட்டியின்
கவிஞர் நம்மை சொக்க வைத்து செல்கிறார்
தன் பாடல்களால் வசப்படுத்தியவர்.
கள்ளிக்காட்டு இதிகாசமும் கருவாச்சி காவியம் தந்த இலக்கிய பேராசானே..
உச்சந்தலையில தண்ணி விட்டு அஞ்சு விரலால்
ஆஞ்சி அலசி விட
கண்ணு தொரக்காத பயலுக்கு கபாலத்தை திறந்து விட்ட நாயகனே…
கருங்குழல் கூந்தலில் நீச்சல் கற்றுத்தந்தவரே…
தேனியின் வடுகப்பட்டியே..!!
கால் நூற்றாண்டை கடந்து நம் மொழிக்காக
ஞான பீடம் விருதை கையில் ஏந்திய தமிழனுக்கு
என் அன்பு வாழ்த்துகள்…!!
உங்கள் எழுத்துகளின் ரசிகையாக எப்போதும் மனம் குளிர்கிறேன்…
இப்படிக்கு….
பிரபஞ்ச ரசிகை, தன்னம்பிக்கை பேச்சாளர், நடிகை, கவிஞர் ரேகா,
