சினேகம் வளர்ப்போம்…!! கவிஞர் டேனியல் ஜூலியட்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சிறுமதி கொண்டவர்களால்
சிறுமை பட்டு கள்வர்கள் நடுவே
சிரசின் மேல் கூரான முள் முடி
சிந்தி காய்ந்த இரத்தத்துளிகள்..


சிரிப்பு பரிகாசம் நிந்தை அவமானம்
சிறிதும் சினம் கொள்ளாத தேவமைந்தன்
சிரமங்களை களைந்தவருக்கா இந்த
சிலுவை பாரம், சிலுவை மரணம்
சிந்திப்போம்…சிந்திப்போம் ……!!


சிறிதளவாவது தேவ வழி பயணிப்போம்
சிந்தை தினம் தினம் மகிழட்டும்
சிறப்புகள் வந்து வந்து சேரட்டும்
சிரம் தாழ்த்தி வணங்கி தொழுவோம்…!!


சிவந்தி மலர் போல வாழ்க்கை மணக்க
சினம் தவிர்ப்போம், சினேகம் வளர்ப்போம்
சிலுவை பாடுகளை தினம் நினைப்போம்
சிலுவையில் மரித்து மீண்டும் உயிர்த்த
சிந்தைக் கவர்ந்த தேவமைந்தன் வழி நிற்போம்…!!

( இந்த சிலுவை காட்சி தஞ்சாவூர் பூண்டி மாதா ஆலய வளாகத்தில் ஜனவரி 17 2026 ல் எடுத்தது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed