இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாள் விழா…!! தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் நடந்தது…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாள் விழா…!!

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் 06/04/2026 காலை 11 மணிக்கு ஸ்ரீ நிவேதா பெண்கள் தையலக வளாகத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அவர்களின் 89_ வது ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மன்றத் தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் தலைமையேற்று நம்மாழ்வார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வியந்து போற்றினார்.

கவிஞர் என். சிவ சண்முகம், கவிஞர் சுப்பு தர்மன், சமூக ஆர்வலர்கள் ஷைனி சிவக்குமார் ஆகியோர் மரக்கன்றுகள் வழங்கினார்.

விழாவில் கே.ரங்கநாதன், மலர், ரோகிணி, ஐ.ராஜேஷஸ்வரி, ஜோதிடர் எம். சோமசுந்தரம், கே. உதயகுமார் ஏ. ஞானமுத்து உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top