தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு, பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் மாசிலாமணி தலைமையில், சங்கராபுரம் அரசு ஆண்கள் பள்ளியில் நடந்தது…!! உதவி செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் R. மாசிலாமணி தலைமையில், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் K.S. பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநில துணை பொதுச் செயலாளர் R.K. முருகன் , தேசிய குழு உறுப்பினர் K.V. தேவராஜன் , மூத்த பத்திரிகையாளர் J. சூர்ய நாராயணன் , மாநில ஆலோசகர் K. கணபதி , மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதி. மாரியாப் பிள்ளை ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

  1. தாலுகா செய்தியாளர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும்.
  2. மாவட்ட , வட்டார செய்தியாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.
  3. அனைத்து செய்தியாளர்களுக்கும் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும்.
    என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி நன்றி கூறினார்.

உறுப்பினர்கள் அனைவருக்கும் 2026 தினசரி காலண்டர் , பேனா , ATM பவுச் , பிஸ்கட், சால்வை , மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் , கள்ளக்குறிச்சி , உளுந்தூர்பேட்டை , திருக்கோவிலூர் , மணலூர் பேட்டை , வாணாபுரம் , சங்கராபுரம், சின்ன சேலம், கல்வராயன் மலை பகுதிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

உதவி செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)