கிரீன்லாந்து வேண்டும்…! – டென்மார்க்கிற்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை! நேட்டோவில் ருந்து வெளியேறும் திட்டத்தில் டிரம்ப்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

கிரீன்லாந்து வேண்டும்…! – டென்மார்க்கிற்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை! நேட்டோவில் ருந்து வெளியேறும் திட்டத்தில் டிரம்ப்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

நேட்டோ அமைப்புடனான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்க நேட்டோ நாடுகள் மறுத்ததால், அந்த அமைப்பை காகிதப் புலி என டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கிரீன்லாந்து விவகாரமே தொடக்கம்: நேட்டோ நாடுகளுக்கும் தமக்கும் இடையிலான விரிசல் கிரீன்லாந்தை இணைக்கும் முயற்சியிலிருந்தே தொடங்கியதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். “எங்களுக்கு கிரீன்லாந்து வேண்டும், ஆனால் அவர்கள் தர மறுக்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்து பகுதி ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்திற்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும், டென்மார்க்கால் அதைப் பாதுகாக்க முடியாது என்றும் டிரம்ப் வாதிடுகிறார். எனவே, அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் என அவர் கருதுகிறார்.

நட்பு நாடுகள் ஒத்துழைக்கத் தவறினால், நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்தும் அவர் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரீன்லாந்தை விட்டுக் கொடுக்க மறுக்கும் ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக டிரம்ப் எச்சரித்திருந்தாலும், பின்னர் அந்த முடிவைத் தற்காலிகமாக மாற்றிக்கொண்டார்.

டிரம்பின் இந்த அதிரடிப் போக்கு ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே இந்த விவகாரத்தைச் சுமூகமாக முடிக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top