ஈழ விடுதலைப் போராட்ட கவிஞர், புரட்சி பாடகர் தேனிசை செல்லப்பா விடை பெற்றார்..,!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஈழ விடுதலைப் போராட்ட கவிஞர், புரட்சி பாடகர் தேனிசை செல்லப்பா விடை பெற்றார்..,!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

l

தேனிசை செல்லப்பா விடை பெற்றுக்கொண்டார்.

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவரது பங்கு
மகத்தானது.

விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த போராட்ட வரலாறுகளை தனது உணர்ச்சிக் குரலால் மக்களிடம் கடத்தியவர்.

உலக நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பாக நிகழ்ச்சிகளை நடத்தி புலிகளுக்கு நன்கொடை திரட்டியவர்.

ஈழவிடுதலை இயக்கத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களால் “#மாமனிதர்” விருது வழங்கப்பட்ட பெருமைக்குரியவர்.

ஈழப் போராளிகளின் இல்லம் தோறும் அவர்கள் பயணிக்கும் வாகனம் தோறும் தேனிசை செல்லப்பாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

ஒரு கட்டத்தில் அவரது பாஸ்போட் ஒன்றிய ஆட்சியால் முடக்கப்பட்டது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு மீட்டெடுத்தார்.

விடுதலைப் புலிகளுக்காக தொடர்ந்து இசை நாடாக்களை வெளியிட்டுக் கொண்டே இருந்தார்.

தமிழீழப் பகுதி முழுதும் பயணித்து ஈழ விடுதலை உணர்வுகளை தனது உணர்ச்சிமிகு பாடல்களால் தட்டி எழுப்பியவர்.

ஈழ விடுதலை வரலாற்றுப் பக்கங்களில் அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கும்.

பெரும் புகழோடு விடைபெறும் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வீரவணக்கம்.

விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர் திவிக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top