நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனைக்கு உட்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ நல்லவாழ்வியல் மையம் சார்பில், நாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு யோகா பயிற்சி முகாம்….

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
புதியநாளிதழ்
அக்னிப்புரட்சி
SpotlightTamilnadu
Akkappore.news / just click now

நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனைக்கு உட்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ நல்லவாழ்வியல் மையம் சார்பில், நாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு யோகா பயிற்சி முகாம்

28,ஏப்,2026
நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனைக்கு உட்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ நல்லவாழ்வியல் மையம் சார்பில்,யோகா மற்றும் இயற்கை மருத்துவ நல்வாழ்வியல் நாகப்பட்டினம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.R.கனிமொழி,B.S.M.S,M.D.(Siddha) அவர்கள் நல்வழிகாட்டுதல்களுடன் நாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு யோகா பயிற்சி முகாம் 28-04-2026 அன்று நடைபெற்றது.


இந்த முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு மூச்சுப் பயிற்சிகள், யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை மருத்துவ உணவுமுறை குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், சுகப்பிரசவம் ஏற்பட தேவையான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இம்முகாமின் முக்கிய நோக்கம், கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, ரத்தசோகை, தூக்கமின்மை மற்றும் பிரசவம் தொடர்பான பயம் போன்ற பிரச்சினைகளிலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவுவதாகும்.
மேலும், பயம் மற்றும் தூக்கமின்மையை குறைப்பதற்காக கர்ப்பிணி பெண்கள் தாங்களே சுயமாக செய்யக்கூடிய அக்குபிரஷர் புள்ளிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.


இந்த பயிற்சிகள் மூலம் கர்ப்பிணி பெண்கள் பிரசவம் பற்றிய பயமின்றி, ஆரோக்கியமான தாய்-சேய் நலத்தைப் பெற வழிவகுக்கும் என்றும் பேராசிரியர் மரு.க.முத்துக்கிருஷ்ணன்,BNYS,M.D..அவர்கள் தெரிவித்தார்..


இம்முகாமில் மொத்தம் 50 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளின் மூலம் பயன் பெற்றனர்.

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
புதியநாளிதழ்
அக்னிப்புரட்சி
SpotlightTamilnadu
Akkappore.news / just click now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top