வாடிப்பட்டி பால தண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வாடிப்பட்டி பால தண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது:

வாடிப்பட்டி, மே.16.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை தர்மராஜன் கோட்டையில் இயற்கையில் எழில்சூழ்ந்த சிறுமலை அடிவாரத்தில்
கோம்பை கரட்டில் எழுந்தருளியுள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவை முன்னிட்டு, பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு,
அபிஷேக, ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது.
இன்று காலை 8 மணிக்குகோவில் மகா மண்டபத்தில் சேவல் கொடி ஏற்றப்பட்டது. அதன் பின் 8. 15 மணிக்கு தெப்பக்குளம் முன்பாக மயில் அருகில் உள்ள கம்பத்தில் சேவல் கொடி ஏற்றி மாலை அணிவித்து தீபாராதணை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வைகாசி விசாகதன்று பால்குடம் பூக்குழி இறங்குவதற்கு காப்பு கட்டினர். இதன் முக்கிய திருவிழாக்கள்30 ந்தேதி சனிக்கிழமை வைகாசி விசாகத்தன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வாடிப்பட்டி மௌன குருசாமி மடத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி 3 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக சென்று பால
தண்டாயுதபாணி கோயிலில், பாலதண்டாயுத
பாணிக்கு பாலாபிஷேகம் செய்வார்கள்.
கோவில் செல்லும் சாலையில் பந்தலமைத்து உபயோதாரர்கள் நீர்மோர், அன்னதானங்கள் வாங்குவார்கள். 31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பாலதண்டாயுதபாணி கோயிலில் இருந்து பட்டுப்பல்லக்கில் சுவாமி புறப்பட்டு வல்லப கணபதி கோவிலில் வழிபாடு செய்து அம்பலகாரர் திருண்ணில் அபிஷேகம் செய்து ஈ கள்ளர் திருக்கண்ணில் இரவு தங்குவார். 1 ந்தேதேதி திங்கள் கிழமைமாலை 6 மணிக்கு மேல் சீர் பாதம் தாங்கிகளுக்கு பாத்தியப்பட்ட ஈ கள்ளர் திருக்கண்ணிலிருந்து புறப்பட்டு வல்ல கணபதி கோவிலில் ராமலிங்க சேர்வை தானம் வழங்கப்பட்ட இடத்தில் மல்லிகை மலர்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நள்ளிரவு 12 மணிக்கு பூப்பல்லக்கில் புறப்பட்டு வாடிப்பட்டி, ராமராயக்கன்பட்டி, தாதம்பட்டி, நீரேததான் ,போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய வீதிகளில் உலா சென்று ஏராளமாக திருக்கண்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து விடிய விடிய பூப்பல்லாக்கு உற்சவம் முடிந்து மறுநாள் மதியம் 2 மணிக்கு கோயில் சென்று அடைவார். இந்த 3 நாட்களும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதன் ஏற்பாடுகளை, சொக்கையா சுவாமி பேரபிள்ளைகள் சீர் பாதம் தாங்கிகள் மற்றும் வாடிப்பட்டி கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top