நென்மேலியில் கட்டிட அனுமதிக்கு ஊராட்சி தலைவர் பெற்ற லஞ்சப் பணத்தை திருப்பித்தர கோரி மக்கள் நூதன போராட்டம்..!!
சீட்டா நிறுவனர், சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு விடுத்துள்ள பரபரப்பு அறிக்கை…!! அக்கப்போர் நாளிதழ், Akkappore.news / சொடுக்குங்க
சீட்டா நிறுவனர், சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு விடுத்துள்ள பரபரப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் மாற்றத்துக்கான உண்மையான ஞான உதயம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நென்மேலி ஊராட்சியில் இருந்து பிறந்துள்ளது.
இந்த மாற்றம் வருவதற்கு காரணமாக இருந்த திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ) திரு சிவ கலைச்செல்வன் மற்றும் மண்டல அலுவலர் திருமதி சொரணலட்சுமி ஆகிய இருவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளேன்.
இவர்கள் இருவரும் மக்களுக்கான அடிப்படை கடமைகளை செய்ய மறுத்த ஒரே காரணத்தால் நென்மேலி வாழ் மக்கள் ஒன்று சேரவும், போராடவும், மக்கள் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கவும், ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஒத்துழைப்பு தரவும் காரணமாக இருந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது.
மேலும், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ) சிவ கலைச்செல்வன் முன்பு திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ) ஆக இருந்து பொது மக்களின் புகார் காரணமாக வட்டார வளர்ச்சி அலுவலர் (ஆணையர்) ஆக மாற்றப்பட்டு அதன் பின் பணி மாறுதலாகி விட்டார்.
அந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு மிண்டும் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலராக பல லட்சம் பணம் கொடுத்து மீண்டும் அதே வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ) ஆக பணிக்கு வந்த பின்பு பொதுமக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் வேண்டும் என்று மண்டல அலுவலரை வைத்து ஊராட்சி மணி புகார்களுக்கும் முதல்வர் தனிபிரிவு புகார்களுக்கும் பொய்யான தகவல் மற்றும் மழுப்பலான பதில்களை கொடுத்து நென்மேலி மக்களிடம் விரோதத்தை வளர்த்து கொண்ட. வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ) சிவ கலைச்செல்வன் மற்றும் மண்டல அலுவலர் சொர்ணலட்சுமி இருவரும் சேர்ந்து செய்த சட்டவிரோத செயல்களால் தான் மேலும், நென்மேலி ஊராட்சி மக்களுக்கும் ஊராட்சி நிர்வாகத்துக்கும் இடையில் காழ்புணர்ச்சி உருவாக்கவும் காரணமாகவும் இருவரும் இருந்ததாலும், தொடர் புகார்கள் வந்தும் நடவடிக்கை ஊராட்சி நிர்வாகத்தை எடுக்க விடாமல் இருவரும் தடுத்தும் உள்ளதாக கூறப்படுகிறது.
அதுபோல பல சந்தற்ப்ப சூழ்நிலைகளில் மாவட்ட நிர்வாகம் கூறிய பணிகளையும் இருவரும் நென்மேலி ஊராட்சிக்கு செய்ய மறுத்து செய்யாமல் சிவ கலைச்செல்வன் மற்றும் சொரணலட்சுமியும் செய்த மிகப்பெரும் தவறுகள் தான் நென்மேலி மக்கள் ஆவேசம் அடைய காரணமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றமாக உருவாக நென்மேலி ஊராட்சி மக்களின் ஒன்றுமையும் அவர்கள் கையில் எடுத்த சரித்திர வரலாறு மிக்கதுமான நென்மேலி ஊராட்சி மக்களுக்கான அடிப்படை வசதிகளை நென்மேலி ஊராட்சி நிர்வாகம் செய்து தர முடியாது என்றால், நென்மேலி ஊராட்சி நிர்வாகம் ஊராட்சி வாழ் மக்களிடம் வீடுகள் கட்டும் தருவாயில் கட்டிட அனுமதி பெற ஊராட்சி மக்களிடம் வாங்கிய லஞ்ச பணத்தை திருப்பி தர கேட்டு போராடும் துணிச்சல் தமிழகத்தில் சாதனை மிக்க போராட்டமாக மாறி தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சகாப்தமாக உருவெடுத்து உள்ளது.
அவ்வாறு நென்மேலி ஊராட்சியில் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பொறுப்பு எடுத்த பின் இதுவரை 1000 த்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கட்டிட அனுமதிக்கு சுமார் ரூ 10,000/- முதல் ரூ 50,000/- வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அப்படி கட்டிட அனுமதி வழங்க வாங்கிய லஞ்ச பணத்தை திருப்பி சம்மந்தப்பட்ட மக்களுக்கு கொடுக்க வில்லை எனில் தமிழக லோக் ஆயுத்தாவில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் செய்தால் லஞ்சமாக கொடுத்த பணத்தை வசூலித்து கொடுப்பது மட்டும் அல்லாது தவறுக்கு தக்க தண்டனையும் வழங்கப்படும் என்ற உத்திரவாதம் கிடைத்து உள்ள காரணத்தால் நென்மேலி ஊராட்சியில் தற்போது 214 நபர்கள் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் கொடுத்த பணத்தை திருப்பி தர கேட்டு லோக் ஆயுத்தாவுக்கு மனு கொடுக்க தயாராகி உள்ளார்கள்.
இந்த மாத இறுதிக்கு உள்ளாக. மேற்படி 750 நபர்கள் வரை புகார் செய்ய கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இது போல் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புதுப்பட்டினம், நெரும்பூர், வள்ளிபுரம், லத்தூர்,
நெய்குப்பி, ஒத்திவாக்கம்,திருமணி, விட்டிலாபுரம் ஆகிய ஊராட்சிகளில் இருந்தும், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் இருந்தும், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் இருந்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் இருந்தும் மக்கள் கொடுத்த லஞ்சத்தை வாங்க தொலைபேசி அழைப்புகள் வந்து உள்ளது என சீட்டாவின் நிறுவனரும் அதன் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மேனுமான லஞ்ச ஒழிப்பு ப.பாபு செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
