அமெரிக்கா – ஈரான் போர் கற்றுத் தந்த பாடமும் – தீர்வும்…!! அரசியலில் பெண்கள் ஈடுபட வேண்டிய அவசியமும்….!! சுபத்ரா தேவி தனசிங், சக்தி இயக்கம், (ShakthiAbhiyan) இந்திய தேசிய காங்கிரஸ். அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

அமெரிக்கா – ஈரான் போர் கற்றுத் தந்த பாடமும் – தீர்வும்…!!அரசியலில் பெண்கள் ஈடுபட வேண்டிய அவசியமும்….!! சுபத்ரா தேவி தனசிங், சக்தி இயக்கம், (ShakthiAbhiyan) இந்திய தேசிய காங்கிரஸ். அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

போருக்கு முன்பு ஹார்முஸ்சை ஈரான் கட்டுப்படுத்தவில்லை ஆனால் இப்போது கட்டுப்படுத்துகிறது.

போருக்கு முன்பு கப்பல்களிடம் 2 மில்லியன் டாலர் சுங்க கட்டணம் வசூலுக்கும் அதிகாரம் ஈரானிடம் இல்லை இப்போது இருக்கிறது..

போருக்கு முன்பு ஈரானின் எண்ணெய்க்கு தடை இருந்தது இப்போது இல்லை.

போருக்கு முன்பு அரபு நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் நல்ல நிலையில் இருந்தன இப்போது இல்லை..

போருக்கு முன்பு அமெரிக்காவில் எரிவாயு விலை 4 டாலர் குறைவாக இருந்தது, இப்போது 38% உயர்ந்து இருக்கிறது.

அதே சமயம் ஈரானில் இந்த போருக்கு முன்பு இருந்த அரசே இப்போதும் இருக்கிறது..

போருக்கு முன்பு ஈரானிடம் இருப்பதாகச் சொல்லப்பட்ட யுரேனியமும் அதனிடமே இருக்கிறது..

உலகின் பெரிய ‘வல்லரசு’ என்று பெயர் பெற்ற நாடு ஒரு பிஸ்கோத்து என்று உலகம் உணர்ந்து கொண்டது இந்த போரால். இஸ்ரேல் என்பது அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஒரு மத்திய கிழக்கு ரவுடி என்றும் அதற்கு உண்மையில் எந்த தார்மீகமும் இல்லை என்பதையும் உலகம் தெரிந்து கொண்டது. உலக மக்கள் மொத்தமும் சகோதரத்துவத்தின் பக்கமும், உலக அரசாங்கங்களில் யார் சரியான பக்கத்தில் நிற்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது. பிரச்சினை என்று வரும்போது யார் தன் மக்கள் பக்கம் நிற்கிறார்கள் யார் சுயநலமாக இருக்கிறார்கள் என்பதை அவரவர்களே நிரூபித்து விட்டார்கள்.

ஒரு தலைவர் இறப்பதால் எந்த நாடும் வீழாது, தொடர்ந்து அடுத்தடுத்த தலைவர்களையும் மக்களையும் வீரமாக செதுக்கி வைப்பது மூலமே எந்த நாடும் தனது இறையாண்மையை பாதுகாக்க முடியும். வீரம் மட்டுமே போதாது. விஞ்ஞானமும் வேண்டும்.

எவ்வளவு தான் நம் பக்கம் நியாயம் இருந்தாலும், விஞ்ஞானத்தில் முதலீடு செய்து, நவீன போர் கருவிகளையும் எந்திரங்களையும் திடமாக வைத்து கொள்ளவில்லை என்றால், இங்கே நியாய தர்மம் எல்லாம் பேசுவதற்கு நாடே இருக்காது என்பது பாலஸ்தீனத்தீன் மற்றும் ஈரான், இஸ்ரேலை கையாண்ட விதத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

கேஸ், எண்ணை போன்ற அன்றாட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்துதான் வாழ வேண்டும் என்ற நிலைக்கு அந்தந்த நாட்டு மக்களை வைத்திருப்பது என்றாவது ஒரு நாள் நம் முதலுக்கே மோசமாக முடியும் என்பது தெளிவாகி விட்டது‌.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு எண்ணை வளம். நமக்கு வெயில் பலம். நாம் சோலார் குக்கர் முதல், அதிநவீன விறகடுப்பு சோலார் மின்சாரம், வெயிலில் விளையும் விவசாய பொருட்கள், அதை வைத்து பயோ கேஸ் தயாரிப்பு, பயோ டீசல், மின்சார வாகனங்கள், மாடி தோட்டம் உள்ளூர் பொருளாதாரம் என நமது முதுகெலும்பை பலப்படுத்த வேண்டும்.

முதல் முறையாக பாலஸ்தீன் தன் மீதான தாக்குதல்களை மிகப்பெரிய அளவில் சோஷியல் மீடியாவில் பரப்பியது இன்றைக்கு உலக மக்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நேர்மையற்ற தன்மையை உணர்ந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இதற்கு முன்பு நடந்த பல போர்களில் நாம் மீடியாக்கள் மூலம் அமெரிக்கா கட்டிய கதைகளையே நம்பி இருந்தோம். சோஷியல் மீடியா மக்களின் குரலாக மெயின் ஸ்ட்ரீம் மீடியாவை தோற்கடித்து நியாயத்தை எடுத்து காட்டியது. ஆக நமது ஒவ்வொரு நியாயத்துக்கும் சோஷியல் மீடியாவை சிறப்பாக பயன்படுத்த கற்று கொள்ள வேண்டும்.

உள்ளூர் சாதி ஆதிக்கம் முதற்கொண்டு சர்வதேச ஆதிக்கம் வரை வன்முறை எப்படி அநியாயத்தை பாதுக்காக்க பயன்படுத்தபடுகிறது என்பது தெளிவாகியது.

ஆண்களே ஆண்களால் ஆண்களுக்காக கட்டப்பட்ட அரசியல், உள்ளூர் அரசியலாக இருந்தாலும் சர்வதேச அரசியலாக இருந்தாலும், வாந்தி வரும் தரத்தில் இருக்கிறது.

இந்த அரசியலின் முடிவெடுக்கும் இடங்களில் பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தனது இடத்தை உடனடியாக பிடித்து அனைவருக்குமான அரசியலாக, உலகமாக உடனடியாக மாற்ற வேண்டும்.

இல்லை என்றால் நமது தலைமுறை, மனிதர்களின் இறுதி தலைமுறையாக மாறிவிடுவோம்.

போருக்கு முன்பு புரியாத பல விஷயங்கள் இந்த போரில் நாம் கற்றுக் கொண்டோம். ஒவ்வொருவரும் தீவிர அரசியலில் இறங்கியே ஆக வேண்டும்.

சுபத்ரா தேவி தனசிங், சக்தி இயக்கம், (ShakthiAbhiyan)
இந்திய தேசிய காங்கிரஸ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top