N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்
Akkapore.news
Akkappore.com
/ Just CliCK now
அலங்காநல்லூர் அருகே ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி – அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்….
N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.com
/ Just CliCK now
அலங்காநல்லூர்,பிப் :26
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் (முக்குலத்தோர்) இளைஞர் நலச்சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி
நடந்தது.
இந்தப் போட்டியை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி
பச்சை கொடியசைத்து உறுதிமொழி ஏற்புடன் தொடங்கி வைத்தார்.
சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், ஆர்.டி.ஒ கருணாகரன்
வட்டார மருத்துவர் வளர்மதி
உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


நலச்சங்க நிறுவனத் தலைவர்
எஸ் டி எம் செந்தில்குமார் வரவேற்றார்.
தொடர்ந்து போட்டியில், 980க்கும் மேற்பட்ட காளைகளும், 470 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். போட்டியில் பங்கேற்ற
காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதோடு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஒவ்வொரு சுற்றுக்கும் 50 மாடுபிடி வீரர்கள் வீதம் ஒவ்வொரு சுற்றுகளாக நடைபெற்றது.
இந்தப் போட்டிக்காக, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 120 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும், 108 ஆம்புலன்ஸ் 4ம். 30 பேர் கொண்ட கால்நடை மருத்துவ
குழுவினரும், 2 கால்நடைக்கான ஆம்புலன்ஸும் மற்றும் 20 தீயணைப்பு துறையினரும், 2 தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் களத்தில் காளைகளை அடக்கும் வீரருக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் செல்லும் காளைகளுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ், ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் குலமங்கலம் திருப்பதி .உணவியல் நிபுணர்தர்மராஜா,
கல்லணை கார்த்திகேயன்.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னை குடி தனுஷ்கோடிஇளைஞர் அணி சந்தன கருப்பு. தர்மா.
உள்பட
பலர் கலந்து கொண்டனர்.
N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.com
/ Just CliCK now