இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டல நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராக திரு வி.சி. அசோகன் பொறுப்பேற்றார் பணி சிறக்கவாழ்த்துகிறோம்🙏💐💐
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் புதியநாளிதழ் அக்னிப்புரட்சி
செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now
ஏப், 03, 2026
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டல (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராக திரு வி.சி. அசோகன், 2026 ஏப்ரல் 01 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன எண்ணெய் தொழில்துறைக்கான மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றுவார்.
எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த, பன்முக அனுபவமுள்ளவர் திரு அசோகன். அவர் பெட்ரோலியத் துறை செயல்பாடுகள், பெடரோலிய தொழில்துறையில் வர்த்தக நுணுக்கங்கள், சில்லறை விற்பனை உள்ளிட்ட பல துறைகளில் ஆழ்ந்த நிபுணத்துவம் கொண்டவர். எரிசக்தி வணிகம் குறித்த வலுவான உத்தியும் செயல்பாட்டுத் திறனும் கொண்டவர்.

திரு அசோகன், திருச்சிராப்பள்ளியில் உள்ள மண்டலப் பொறியியல் கல்லூரியில் (REC) வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், நாடு முழுவதும் பல பிரிவுகளில் தலைமைப் பதவிகளில் தொடர்ந்து சிறந்து விளங்கி வருகிறார். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பிரிவுகள், மாநில அளவிலான செயல்பாடுகளுக்குத் தலைமை வகித்துள்ளார். முக்கியப் பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு, அகில இந்திய அளவில் விரிவான சந்தைப்படுத்தல் அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
இந்த பதவிக்கு முன்பு, திரு அசோகன் மும்பையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் தலைமை அலுவலகத்தில் அகில இந்திய சில்லறை விற்பனைப் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார். அங்கு, பல முன்னோடியான சில்லறை விற்பனை உத்திகளை செயல்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
மேலும், இலங்கையில் உள்ள இந்தியன் ஆயிலின் துணை நிறுவனமான லங்கா ஐஓசி பிஎல்சி-ல் விற்பனைப் பிரிவுத் துணைத் தலைவராகப் பணியாற்றியதன் மூலம், சர்வதேச அனுபவத்தையும் அவர் கொண்டுள்ளார். அங்கு, எரிபொருள் சந்தைப்படுத்தல் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதிலும், சந்தையில் ஐஓசி பிஎல்சி-யை வலுப்படுத்துவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.
தமது நிர்வாகப் பொறுப்புகளுடன், திரு அசோகன் சிங்கப்பூரில் உள்ள சன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலும் பணியாற்றி, நிலையான போக்குவரத்துத் தீர்வுகளை ஏற்படுத்துவதில் சிறப்பான பங்களிப்பையும் வழங்கி வருகிறார்.
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் புதியநாளிதழ் அக்னிப்புரட்சி
செய்திப்பிரிவு,
Akkappore.news / just click now