எங்கு இணைவது என்ற முடிவை தள்ளிப்போட்டு வந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளார்…!! சாவித்திரி கண்ணன் அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

எங்கு இணைவது என்ற முடிவை தள்ளிப்போட்டு வந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளார்…!! – சாவித்திரி கண்ணன் அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

திரிசங்கு நிலையில் அரசியலுக்கு திரும்ப சரியான இயக்கத்தை தேடியவர் இறுதியில் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.

மாற்று அரசியலை நோக்கிய பயணத்தில் நாம் தமிழர் கட்சியில் பயணித்தவர் என்பதால், ஏதேனும் ஒரு திராவிடக் கட்சி கட்சியில் சேர்ந்து செயல்பட அவருக்கு தயக்கம் இருந்தது.

அதுவும் திமுகவை எதிர்த்த அரசியலில் தீவிரத் தன்மையில் இறங்கி செயல்பட்டதால் அவர் திமுக இருக்கும் திசை நோக்கிய நகர்வையே முற்றிலும் தவிர்த்தார். அதிமுகவிலும் ஆர்வமின்றியே இருந்தார்.

புதிதாக வந்த த.வெ.கவில் மாற்று அரசியலை எதிர்பார்த்த காளியம்ம்மாளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இன்றைய மீனவப் பெருங்குடிகளின் கணிசமான ஆதரவு விஜய்க்கு இருக்கிறது என சர்வே செய்த நண்பர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் அந்தக் கட்சியில் இணைந்து செயல்படுவதற்கே முதல் பிரிபரன்ஸ் தந்தாலும், முறையான அரசியலை அங்கிருந்து முன்னெடுக்கும் வாய்ப்பு அங்கு இருப்பதாக காளியம்மாள் நம்பவில்லை.

ஆனால், எளிய மக்களான மீனவர்கள் நலனுக்கான ஒரு அரசியலுக்கு வலுவான ஒரு அரசியல் இயக்கத்தின் துணையின்றி சாத்தியமில்லை என்பதால் அதிமுகவில் சேர்ந்துள்ளார்…என நினைக்கிறேன்.

சாவித்திரி கண்ணன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top